📢📢சென்ற சில காலங்களாக கிறித்தவ மிசனரிகள் சில பொய்யை பரப்பி திரிகிறார்கள். குர்ஆன் பாதுகாக்கபட்டது அல்ல என்ற பொய்தான் அது. குர் ஆனின் ஈரடுக்கு பாதுகாப்பு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
📣📣ஒலி வடிவில் பாதுக்காக்கப்பட்ட குர்ஆன்:
🕋 இது குறித்து மிக விளக்கமாக பார்க்கவில்லை என்றாலும் இது குறித்த குர்ஆன் மற்றும் நபி மொழியின் அடிப்படையில் பார்ப்போம்.
💾அல்லாஹ் அல் குர்ஆனில் எப்படி தனது வேதத்தை பாதுகாக்கவுள்ளதாக கூறினானோ அதே போன்ற இன்றுவரை அது பாதுக்காக்கப்படுகிறது:
அல்லாஹ் பின்வருமாறு குறிபிடுகிறான்:
📖மாறாக,இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன.அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 29:49)
💾அதேபோல் நபி(ஸல்) அவர்களும் பின்வருமாரு குறிப்பிடுகிறார்கள்
இயாள் பின் ஹிமார் அல்முஜாஷிஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
📣📣அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உரையாற்றியபோது பின்வருமாறு கூறினார்கள்:
.................மேலும் (என்னிடம்) இறைவன், நான் உம்மைச் சோதிப்பதற்கும் உம்மைக் கொண்டு (பிறரைச்) சோதிப்பதற்குமே உம்மை நான் அனுப்பினேன். நீரில் அழிந்துபோய்விடாத வேதத்தையும் உமக்கு நான் அருளினேன். அதை உறங்கும்போதும் விழித்திருக்கும் நிலையிலும் நீர் ஓதுகின்றீர்" என்று கூறினான்.(நூல்: முஸ்லிம் 5498)
💾ஆக மேற்குறிபிட்டபடி குர் ஆன் ஆனது இன்றும் முஸ்லிம் மக்களின் உள்ளங்களில் பாதுகாக்கப்படுகிறது. சாதரணமாக அன்றாடம் தொழுகையை நிறைவேற்றுபவர் 100 ல் இருந்து 150 வசனங்களை மனனமிட்டுவிடுவார் தொழுகையில் ஓதப்படுவதை கேட்டே.
✍️மேலும் ஒவ்வொரு வருடமும் குர்ஆனை மனனமிட்ட ஹாபிழ்கள் லட்சகணக்கில் வெளிவருகிறார்கள். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த பட்சம் ஒரு ஹிப்ளு மதரஸா உண்டு. ஆக குர் ஆன் உள்ளங்களில் பாதுகாக்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. இன்று இருக்கும் பெரும்பான்மை மக்களின் ஓதல்முறையை சரிகண்டு இஸ்லாமிய சமூகம் சென்று கொண்டே இருக்கும் என்பது தெளிவான விஷயமாக இருக்கிறது. அதனால்தான் இது குறித்து வில்லியம் கிரகாம் என்ற ஹார்வர்ட் பல்கலை ஆசிரியர் குறிபிடும் போது பின்வருமாறு கூறுகிறார்,
✍️ஒரு ஆங்கில அரபியே ஆய்வாளர் முன்பே குறிபிட்டது "குர் ஆனின் முதலில் இருந்து கடைசி வரை கேட்கப்படவேண்டிய புத்தகமே அன்றி வாசிக்கப்பட வேண்டிய புத்தகம் அல்ல. இஸ்லாமிய வரலாற்றின் 13 நூற்றாண்டுகளாய் எண்ணிலடங்கா மில்லியன் இஸ்லாமியர்களுக்கு அல் கிதாப் கற்கப்பட்டு, ஓதப்பட்டு பல தடவை ஓதல்களால் மணனமிடப்பட்டு வாய்வழியாக கடத்தப்பட்டிருக்கிறது
(P.No: 79-80, Beyond the Written Word: Oral Aspects of the Scriptures in History of Religion by William A.Graham )
மேற்குறிபிட்ட அறிஞரின் கூற்றே அறிவுள்ள மனிதனுக்கு போதுமானது எப்படி அல்லாஹ்வின் தீர்க்கதரிசனம் மெய்படுத்தப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள. மேலும் hifz என்ற சாதரண கூகுள் தேடல் ஆயிர கணக்கான ஆவணங்களை கொண்டுவந்து கொட்டிவிடும்....
👍👍👍 இன்று கிறித்தவ மிசனரிகள் ஒரு நூறு வசனத்தை தங்களது வேதாகமத்தின் மூல மொழியில் வரிசை மாறாமல் மனனமிட்டவரை காட்ட இயலுமா?????👍👍👍
இந்த கட்டுரையின் தொடர்ச்சி- குர்ஆனின் மூல எழுத்துப்பிரதிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக