இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 நவம்பர், 2020

இஸ்லாத்தை இகழ்வோரின் முகத்திரை கிழித்த தாமஸ் கார்லைல்

 

சரித்திரத்தில் ஐரோப்பியர்களின் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் முஹம்மது நபியின் வாழ்வில்  எதிர்த்திசையிலான வலுப்படுத்தலாக அமைந்தன. அவை ஐரோப்பிய யூத காழ்ப்புணர்வின் குரூரத்தை அம்பலப்படுத்தினவே அன்றி முஹம்மது நபி புகழ் வாழ்வில் ஒரு தூசு அளவுக்கு கூட மாசுபடுத்திடவில்லை.

19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய உலகில் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு எதிராக புயல் வீசிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற வீச்சு மிகுந்த சிந்தனையாளரும் அற்புதமான பேச்சாளருமான தாமஸ் கார்லைல் Heroes and Hero-Worship என்ற தலைப்பில் உலகின் கதாநாயகர்களைப் பற்றி தொடர் உரைகள் நிகழ்த்தினார். எடின்பரா பல்கலையில் சட்டம் பயின்ற அவரது உரைகளை மக்கள் கட்டணம் செலுத்திக் கேட்டனர். அவர் எழுதிய Heroes (கதாநாயகர்கள்) என்ற நூலுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. கார்லைல் தனது உரைகளுக்கு கவிதை கதாநாயகர்களாக தாந்தே, ஷேக்ஸ்பியர் ஆகிய இருவரையும், கதாநாயக பாதிரியாராக மார்டின் லூதரையும், கதாநாயக இலக்கிய எழுத்தாளராக ஜான்ஸனையும் ரூஸோவையும், ஆட்சியாளராக நெப்போலியனையும் தேர்வு செய்து அவர்கள் குறித்து ஆழமான கருத்துரைகளை வழங்கினார். 1840 ம் மே 8ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ’ கதாநாயகர் - ஒரு தீர்க்கதரிசியாக’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது இந்த தலைப்பிற்கு தீர்க்கதரிசிகளின் பட்டியலிலிருந்து மோஸேவையோ இயேசுவையோ தேர்ந்தெடுக்காமல் யாரும் எதிர்பாரத விதமாக முஹம்மது (ஸல்) அவர்களை தேர்வு செய்தார். 

 வெளையர்கள் கருப்பின மக்கள் மீது கொண்டிருந்த வெறுப்பைபோல் அந்த கிருத்துவ சமுதாயம் முஹம்மது (ஸல்) அவர்களின் மீது வெறுப்புக் கொண்டிருந்தது. தலைப்பே அவர்களை திடுக்கிட வைத்தது என்றால் தொடர்ந்து அவர் பேசிய தகவல்களில் ஐரோப்பிய மக்களுக்கு பல அதிர்ச்சிகரமான உண்மைகள் காத்திருந்தன.

“முஹம்மதுவுக்கு எந்த வேதச் செய்தியும் வரவில்லை என்று நையாண்டி பேசிய 17 ம் நூற்றாண்டைச் சார்ந்த Hugo Grotius  என்ற டச்சு கவிஞனின் கருத்தை மறுத்து தன்னுடைய உரையை தொடங்கிய கார்லைல், “It is a great shame for anyone to listen to the accusation that Islam is a lie and that Mohammad was a fabricator and a deceiver" என்று தொடர்ந்தார்.

"இஸ்லாம் பொய்யான ஒரு சமயம்; முஹம்மது ஒரு ஏமாற்றுக்காரர் என்று குற்றச் சாட்டை ஏற்பது எந்த நாகரீகமான பிரஜைக்கும் வெட்கரமானது."  என்ற அவரது தொடக்கம் நேயர்களை நிமிர்ந்து உட்கார வைத்தது,

Hugo Grotius  கற்பனையாகவும் கிறுக்குத்தனமாகவும் சொன்ன கதைகளில் கிருத்துவ உலகம் அகமகிழ்ந்து கொண்டிருந்த்து. முஹம்மது சில புறாக்களை வளர்த்தார், அந்தப் புறாக்களுக்கு அவர் நல்ல பயிற்சி கொடுத்தார். அவை அவரது தோளில் வந்து உட்கார்ந்து அவரது காதோரம் வைக்கபடுகிற தானியங்களை சாப்பிடும், அதைதான் தனக்கு வஹி- இறைச் செய்தி வருவதாக அவர் கூறிக்கொண்டார் என முட்டாள்தனமாக கதை கட்டி விட்டிருந்தார் Hugo Grotius . இவர் மட்டுமல்ல இன்றும் தங்கள் பொய்யான கோட்பாடுகளையும் மதங்களையும் மக்களிடையே பரப்பப் பாடுபடும் பல பிரச்சாரகர்களும் இப்படித்தான் உண்மைக்கு சற்றும் தொடர்பில்லாத அறிவீனமான கற்பனைகளை முஹம்மது (ஸல்) அவர்கள் விசயத்தில் நம்பியும் பேசியும் வருகிறார்கள். இஸ்லாம் தொடர்பாக தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொண்ட அறிவீனமான கருத்துக்களை நம்பி, பேசி, அதையே விவாதம் செய்து பரப்புவதன் மூலம் அற்பமாக சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த பலர் நிறைந்திருந்த அந்த திரளான சபையில் கார்லைல் உரத்துக் கூறினார்.

 “இந்த மனிதர் விசயத்தில் இனவெறியோடு திட்டமிட்டு நாம் உருவாக்கிய இந்தப் பொய்களால் நமக்குத்தான் இழிவே தவிர ஒருபோதும் அவருக்கல்ல.”

 தொடர்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நாணயம், உள்ளத்தூயமை ஆகியவற்றை சிலாகித்துப் பேசிய கார்லைல், நபிகள் நாயகத்தின் ஒரு செயலை மிக உவப்போடு குறிப்பிட்டார்.

முஹம்மது (ஸல்) ஒரு முறை மக்காவின் தலைவர்களுக்கு இஸ்லாமை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஏழை கண் தெரியாதவரான அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் இடைமறித்து பேசினார். நபிகள் நாயகம் முகம் சுளித்தார். அப்போது அவ்வாறு செய்ய வேண்டாம் என்ற கருத்தில் “பார்வையற்றவர் தேடி வந்த போது முகம் கடுகடுத்தார்” என்ற கருத்தில் இறைவசனம் அருளப்பெற்றது.

 அதற்கு பிறகு அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) தன்னிடம் வருகிறபோது அவரை “நான் கண்டிக்கப்பட காரணமாக இருந்தவரே வருக!” என பாசத்தோடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைப்பார்கள். வெளியூர்களுக்குச் சென்ற நேரங்களில் இரண்டு முறை அவரை மதீனா நகரின் பொறுப்பாளராக நியமித்தார்கள். இந்த இரண்டு நிகழ்வுகளை எடுத்துக் காட்டிய கார்லைல் “கதாநாயக தீர்க்கதரிசியின் உளத்தூய்மையும் நேர்மையும் இந்த அளவுக்கு இருந்தன” என்று கூறினார்.

நபிகள் நாயகத்தின் சத்தியத்தன்மையை எடுத்துக்காட்ட கார்லைல் அற்புதமான - உலக அனுபவத்தின் சத்தாக அமைந்த ஒரு நியதியை எடுத்துவைத்தார்.

“முஹம்மது ஒரு ஏமாற்றுக்கார்ராக இருந்திருந்தால் 12 நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கிற - 18 கோடி மக்கள் நிழல் பெறுகிற ஒரு சமயத்தை அவரால்  நிறுவி இருக்க முடியாது. சரியான அடித்தளமில்லாத ஒரு கட்டிடம் சீக்கிரம் விழுந்து விடும். மோசடியை நீண்ட காலத்திற்கு மறைத்து வைக்க முடியாது. பொய் சீக்கிரமே வெளுத்து விடும்.”

  நன்றி : ரீட்இஸ்லாம்.நெட் 

---------------------- 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக