இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 16 டிசம்பர், 2019

கட்டுப்பாடுகளே அமைதிக்கான அடித்தளம்


Image result for white sheet marginஒரு வெள்ளைக் காகிதத்தில் கடிதம் அல்லது கட்டுரை எழுத முற்படுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். முதலில் கடிதத்தின் எல்லைகளை வரையறுக்க கீழும்  பக்கவாட்டிலும் மார்ஜின் போட்டு ஒழுங்குபடுத்துவோம். எழுதத் துவங்கும்போது  கடித வரிகள் ஒன்றன்கீழ் ஒன்று சீராக இருக்க ரூல் போடுகிறோம். எழுத நினைப்பதை வாக்கியங்களாகப் பிரிக்கிறோம். வார்த்தைகளுக்கிடையே ஒரே மாதிரியான ஸ்பேஸ் விட்டு வரிகளை எழுதுகிறோம். ஒரு கட்டுரை எழுத நினைத்தால், முன்னுரை, முக்கிய உரை, முடிவுரை என தரம் பிரித்து பத்திகள் பிரித்து எழுதுகிறோம். இவ்வாறு வரம்புகளும் வரையறைகளும் விதிமுறைகளும் பேணுவது எதற்காக? அப்போதுதான் நாம் எழுதுவது ஒரு அர்த்தமுள்ள கட்டுரையாகவோ அல்லது கவிதையாகவோ அல்லது ஒரு காவியமாகவோ ஆகும். பிறரால் படிக்கவும் இரசிக்கவும் முடியும். மாறாக ஒரு வெள்ளைத் தாளை எடுத்து மேற்கண்ட வரையறைகள் எதுவுமே பேணாமல் மனம்போன போக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதப்படுபவை எழுத்துக்களே ஆனாலும் அதை கிறுக்கல் என்றும் எழுதியவரை  கிறுக்கன் என்றும்தான் மக்கள் அழைப்பார்கள்!
வீடு கட்டினாலும்..
அதேபோல நீங்கள் ஒரு காலி மைதானத்தில் வீட்டை கட்ட நினைத்தாலும் முதலில் என்ன செய்வீர்கள்?
மைதானத்தில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வீட்டிற்கான எல்லை வகுப்பீர்கள். வரைபடம் வரைந்து வீடு கட்டுவதற்கு தேவையானவற்றை சேகரிப்பீர்கள். தொடர்ந்து தரையில் அஸ்திவாரம் போட கோடு போடுதல்குழி வெட்டுதல், வரையறுக்கப்பட்ட அளவையில் கலவை தயாரித்தல், அஸ்திவாரக் குழியில் கலவை போட்டு  அஸ்திவார  கற்களை குறிப்பிட்ட இடைவெளி விட்டு அடுக்குதல், கலவை போடுதல், அடுத்த வரிசை கற்களை அடுக்குதல் எனத் தொடங்கி இறுதியில் கூரை போட்டு முடிக்கும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் எல்லைகளையும் வரையறைகளையும் ஏவல்-விலக்கல்களையும் (do’s and don’ts) ஒழுங்கையும் (order) பின்பற்றியே வீட்டைக் கட்டி முடிக்கிறீர்கள். 
இனி, மேற்கண்ட எந்த எல்லைகளையும் வரையறைகளும் ஒழுங்கையும் எல்லாம் புறக்கணித்துஎன் வீடு இது, என் விருப்பம் எனது உரிமைஎன்று கூறிக் கொண்டு மனம்போன போக்கில் நடந்து கொண்டால் என்ன நடக்கும்? மைதானத்தில் அங்கொரு குழி இங்கொரு குழி அங்கொரு கல் இங்கொரு கல் என ஒரு குப்பை மேடுதான் உருவாகி இருக்குமே தவிர குடியிருக்க ஒரு வீடு அங்கு அமையாது என்பதை அறிவோம். 

எல்லைகளும் கட்டுப்பாடுகளும்
இவ்வாறு நீங்கள் உணவு சமைப்பதாக இருந்தாலும், ஆடை தைப்பதாக இருந்தாலும், ஏதேனும் உபயோகமுள்ள ஒரு பொருளை தயாரிப்பதாக இருந்தாலும் அங்கெல்லாம் எல்லைகளையும் வரையறைகளையும் ஏவல்-விலக்கல்களையும் ஒழுங்கையும்  பின்பற்றினால்தான் அந்த முயற்சி பயனளிப்பதாக இருக்கும் என்பது  திண்ணம்!  மாறாக தான்தோன்றித்தனம் பயனுள்ள எதையுமே விளைவிக்காது என்பதும் தெளிவு! ஆக, எல்லைகளும் கட்டுப்பாடும்  ஒழுங்கும்தான் ஆக்கபூர்வமான எதையும் உருவாக்கும். 
 இவ்வாறு மனித வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எல்லைகளும் கட்டுப்பாடும்தான் அவற்றை பயனுள்ளதாக ஆக்குகின்றன. 
அதேபோல அவ்வாறு நீங்கள் தயாரித்த உணவானாலும் ஆடையானாலும் வீடானாலும் அவற்றை பயன்படுத்துவதற்கும் விதிமுறைகள் உள்ளன. உதாரணமாக, மேலாடையைக் கீழாடையாக பயன்படுத்தவோ, சமைத்த உணவை சுவற்றில்  பூசவோ, மனிதர்களுக்காகக் கட்டிய வீட்டை மாட்டுத் தொழுவமாக பயன்படுத்தவோ  மாட்டோம். ஆக, பொருட்களின்  தயாரிப்பு  விஷயத்திலும் சரி, பயன்பாட்டு விஷயத்திலும் சரி, நாம் யாருமே
தான்தோன்றித்தனமாக செயல் படுவதில்லை .  காரணம் நான் அதன் தீய விளைவுகளை நன்றாக அறிவோம்.
அப்படியானால் உலகத்திலேயே மாபெரும் தயாரிப்பான மனித உடலைப் பெற்றுக்கொண்டிருக்கும் நாம் அதன் பயன்பாட்டு விஷயத்தில்  தான்தோன்றித் தனமாக செயல்பட முடியுமா?
கண்டிப்பாக, இந்த மனித உடலின்  பயன்பாடு ஆக்கபூர்வமாக அமைய வேண்டுமானால் மன இச்சைக்கு அடிபணிந்து செயலாற்றுவதை விட இந்த உடலை வடிவமைத்து உருவாக்கியதோடு நில்லாமல் அதனை இடைவிடாது பரிபாலித்தும் வருபவன் எவனோ அவனது வழிகாட்டுதல்படி- அதாவது அவன் கற்பிக்கும் எல்லைகளையும் ஏவல்- விலக்கல்களையும் மதித்து-  செயல்படுவதுதானே முறை?
இதுதான் இஸ்லாம்
அந்த இறைவன் நமக்கு கற்பிக்கும் ஏவல்- விலக்கல்களைப் பேணி அவனது வழிகாட்டுதல் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே இஸ்லாம் என்று அறியப்படுகிறது. இஸ்லாம் என்ற வார்த்தையின் ஒரு பொருள் அமைதி என்பதாகும், அதன் இன்னொரு பொருள் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து வாழ்தல் என்பதாகும். அதாவது கீழ்படிதல் ( discipline) மூலம் பெறப்படும் அமைதியின் பெயரே இஸ்லாம் என்பதாகும்.
உலகம் என்ற  பரீட்சைக் கூடம் 
இப்போது புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி ஒப்புகொண்டாலும் சரி ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரி, நீங்கள் வாழும் வாழ்க்கையைப் பற்றிய நிதர்சனமான உண்மை இதுதான். அதாவது இவ்வுலக வாழ்க்கையை  ஒரு பரீட்சையாக அமைத்துள்ள இறைவன் இந்த கீழ்ப்படிதலைத்தான் நம்மிடம் பரீட்சிக்கிறான். அதாவது யாராவது இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தால் -அதாவது  இறைவன் கற்பிக்கும் எல்லைகளையும் ஏவல் - விலக்கல்களையும்  பேணி  அதன்படி வாழ்ந்தால் - அவர்களுக்கு  இவ்வுலக வாழ்க்கையில் ஒழுங்கும் நல்லொழுக்கமும்  கைகூடுகிறது. அதன்மூலம் அவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ முடிகிறது
மேலும் மறுமை வாழ்க்கையில் அதற்குப் பரிசாக நிரந்தரமான சொர்க்கத்தையும் அடைகிறார்கள்.
  மாறாக யாரெல்லாம் இந்த உண்மையைப்  புறக்கணித்து, - அதாவது படைத்தவன் கற்பிக்கும் ஏவல்-விலக்கல்களை அலட்சியம் செய்து - அவனுக்குக்  கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக இந்த வாழ்க்கையை வாழ்கிறார்களோ   அவர்களுக்கு இம்மை வாழ்க்கையில் ஒழுக்கமும் ஒழுங்கும் உரிய முறையில் கைகூடுவதில்லை. தனி நபர் வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையும் சமூக வாழ்க்கையும் குழப்பங்கள் நிறைந்ததாக அமைகிறது. படைத்தவனை மதிக்காமல் அவன் விதித்த வரம்புகளை மீறிய குற்றத்திற்கு 
தண்டனையாக மறுமையில் நரகத்தை அடைகிறார்கள்.

இறைவன் தனது இறுதிவேதத்தில் தெளிவாக அறிவிக்கிறான்: 
 = ஓவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைக்கக்கூடியதாகவே இருக்கிறது, தீமையை (துன்பங்களை)க் கொண்டும், நன்மையை (இன்பங்களை)க் கொண்டும் பரீட்சிப்பதற்காக உங்களை நாம் சோதிக்கிறோம், மேலும் நீங்கள் நம்மிடமே திருப்பப்படுவீர்கள்.(திருக்குர்ஆன்  21:35)
= திண்ணமாக, நாம் இப்பூமியின் மீதுள்ள அனைத்தையும் அதற்கு அலங்காரமாய் ஆக்கியுள்ளோம், இவர்களில் மிகவும் சிறந்த செயலைச் செய்பவர் யார் என்று இவர்களை சோதிப்பதற்காக! (திருக்குர்ஆன் 18:7)
கீழ்படிந்த வாழ்க்கை மட்டுமே ஏற்புடையது 
இறைவன் ஏற்படுத்தியுள்ள இந்த வாழ்க்கை என்ற  பரீட்சையில்  மனிதர்கள் சுயமாக உருவாக்கிய வாழ்க்கை நெறிகளும், முன்னோர் வகுத்த நெறிகளும், நாத்திகர்கள் உருவாக்கிய வாழ்க்கை நெறிகளும்  தான்தோன்றித்தனமான வாழ்க்கை முறைகளும் எல்லாமே தோல்வியை சந்திக்கும். இறைவன் அவர்களைப் பார்த்து கேட்பதைப் பாருங்கள்:
= இறைவனின்  மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.(திருக்குர்ஆன் 3:83)
இவ்வுலகையும் அவர்களையும் படைத்தவன் பக்குவமான வாழ்க்கை நெறியை வழங்கியிருக்க அதைப் புறக்கணித்து உருவாக்கப்பட்டவை அவனுக்கு ஏற்புடையதல்ல என்பதை திட்டவட்டமாக அறிவிக்கிறான்: 
= திண்ணமாக, இஸ்லாம் மட்டுமே இறைவனிடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) வாழ்க்கை நெறி  ஆகும். (திருக்குர்ஆன் 3:19)
அவ்வாறு வாழ்ந்து செல்பவர்களின் மறுமை நிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் இறைவன் இன்றே எச்சரிக்கிறான் :
= இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில்தான் இருப்பார்.(திருக்குர்ஆன் 3:85) 

வெள்ளி, 13 டிசம்பர், 2019

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - டிசம்பர் 2019

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - டிசம்பர் 2019  இதழ் 
இந்த இதழ் உங்கள் இல்லம் தேடிவர உங்கள் தெளிவான முகவரியை 9886001357  என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள்
பொருளடக்கம்:
மனித இனம் பூமிக்கு வந்த வரலாறு -2
மறுமை நாளில் பயனளிக்கும் நற்குணம் -7
கூடவே வந்த ஷைத்தான்! -8
ஷை த்தானில் இருந்து தற்காத்துக் கொள்ளுங்கள்! -10
பரீட்சையே வாழ்க்கை என்பதை ஏற்காதோருக்கு இழப்பே! -12
நேரடியாக சொர்க்கத்தில் போட்டால் குறைந்தா போய்விடும்? -14
நபிகளாரின் முதுகில் ஈச்சங்கயிற்றின் சுவடு! -16
உலகமெனும் பரீட்சைக் கூடத்தின் இயல்புகள் -17
இப்படியும் சோதனைகள் வருவதுண்டு! -18
சோதனைதான் வாழ்க்கை என்று புரிந்துகொள் மனமே! -19
கொடுங்கோல் அரசனுக்கு முன் துணிச்சல் -20
நபிகளாரை விரட்டிய பெண்மணி -21

முகநூல் கருத்துப் பரிமாற்றம் -20

திங்கள், 2 டிசம்பர், 2019

பரீட்சையே வாழ்க்கை என்றிரு மனமே!



Image result for தூக்கு கயிறு"     நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை ஒரு பரீட்சை என்று உணர்பவர்கள் அனாவசியமான மன உளைச்ச்சல்களில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். வாழ்க்கையில் தோல்விகளையும் இழப்புகளையும் கண்டு துவண்டு போவதில்லை, தற்கொலைகளில் தஞ்சம் புகுவதில்லை. எந்த மாதிரியான சூழ்நிலைகள் எதிர்வந்தபோதும் சுதாரித்துக்கொண்டு முன்னேறுகிறார்கள். பள்ளிக் கூடங்களில் பயிற்றுவிக்கப்பட வேண்டிய அடிப்படை பாடங்களில் ஒன்று இது. ஆனால் பகுத்தறிவு என்ற பெயரில் அறவே நிரூபிக்கப்படாத அறிவியல் ஊகங்களைக் கோர்வையாக்கி படைத்தவனை மறுக்கும் பாடங்களைத்தான் இன்று கல்விக் கூடங்களில் போதிக்கிறார்கள். அதன் காரணமாக தன்னம்பிக்கை அறவே இல்லாத மாணவர்களாக பலர் வளர்கிறார்கள். சிலர் ஒன்றோ இரண்டோ மதிப்பெண் குறைந்தாலும் கூட  தற்கொலைகளில் தஞ்சம் புகுவதையும் நாம் கண்டு வருகிறோம். இனியாவது உருப்படியாக பகுத்தறிவை பயன்படுத்தி நம் தலைமுறைகளைக் காக்க முயற்சிப்போம்.

வாழ்க்கை என்பது ஒரு பரீட்சையே என்பதை அறிந்து கொள்ள பெரும்பெரும் ஆராய்ச்சிகள் எதுவும் தேவையில்லை. ஆறடி மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டுள்ள மிகமிக அற்பமான பகுத்தறிவு கொண்டு சிந்தித்தாலே அனைத்தும் விளங்கும். நாமாக நாம் இங்கு வரவில்லை என்பது உண்மை!
நமது, நிறம், மொழி, நாடு, தாய், தந்தை, உறவுகள் இவை எவையும் நாமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அமைந்தவை அல்ல என்பதும் உண்மை!
நமது என்று நாம் சொல்லிக்கொள்ளும் உடல், பொருள், ஆவி என இவை எவையும் நமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதும் உண்மை! இவற்றுள் ஆவி அல்லது உயிர் என்பது பறிக்கப்பட்டால் மற்ற அனைத்தும் நம்மைக் கைவிட்டுப்போகும் நிலைமை உள்ளதை அறிவோம். உடல் என்ற கூட்டுக்குள் நாம் வந்ததும் இதை விட்டுப் பிரிவதும் நம்மைக் கேட்டு நடப்பவை அல்ல என்பதையும் அறிவோம்.
ஒரு அற்ப இந்திரியத் துளியில் இருந்து தொடங்கி படிப்படியாக பல கட்டங்களைக் கடந்து கருவாக உருவாகி கருவறையில் சொகுசாக வளர்ந்து உரிய பக்குவம் அடைந்த பின் குழந்தையாக வெளிவந்து தொடர்கிறது நம் ஒவ்வொருவரதும் வாழ்க்கைப் பயணம்! ஆக, எதுவுமே நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை. இவற்றோடு இவற்றின் பின்னணியில் உள்ள இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் இவற்றைப் படைத்து பரிபாலித்து வருபவனின் வல்லமையையும் நுண்ணறிவையும் அதிபக்குவமான திட்டமிடுதலையும் பறைசாற்றி நிற்பதை நமக்கு உணர்த்தவில்லையா?. திருமறை குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:
2:164  .
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்;  இரவும்,பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்;  வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன.
(
அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
இவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே நமக்காக இயங்கிக்கொண்டிருக்கும் போது நாம் வீணுக்காகப் படைக்கப் பட்டிருப்போமா? இதையே இறைவன் தன் இறுதிவேதமாம் திருக்குர்ஆனில் கேட்கிறான்:
23:115. “
நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” 
அவ்வாறு சிந்திக்கும்போது இவை எதுவும் வீணுக்காக அல்ல. ஒரு மகத்தான உறுதியான திட்டத்தின் கீழ்தான் நாம் படைக்கப் பட்டிருக்கிறோம் என்பது புலனாகும். இறைத்தூதர்களும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக்கூடமாப் படைத்துள்ளான் என்பது. இதில் நமது  செயல்கள் அனைத்தும் பதிவு செய்யப் படுகின்றன. யார் இறைவனுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் வெற்றி பெறுகிறார்கள். அவர்களுக்கு சொர்க்கம் என்ற நிரந்தர வசிப்பிடம் உண்டு. யார் கட்டுப் படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். அவர்களுக்கு நரகம் என்ற நிரந்தர வேதனைகள் கொண்ட வசிப்பிடம்தான் கிடைக்கும்.
இந்தப் பரீட்சைக் கூடத்திற்குள் நாம் அனைவரும் அவரவருக்கு  விதிக்கப்பட்ட  தவணையில்  வந்து போகிறோம். இங்கு  இறைவனின் கட்டளைகளுக்குக்  கீழ்படிந்து  செய்யப் படும்  செயல்கள்  நன்மைகளாகவும் கீழ்படியாமல்  மாறாகச்  செய்யப்படும்  செயல்கள்  தீமைகளாகவும்  பதிவாகின்றன. இவ்வாறு  ஒவ்வொருவருக்கும்  நன்மைகள் அல்லது தீமைகள் செய்வதற்கு சுதந்திரமும்  வாய்ப்பும் அளிக்கப்படும்  இடமே  இந்த தற்காலிகப் பரீட்சைக் கூடம்!.

= உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 67:2)
= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 21:35)
=============== 
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?

வியாழன், 14 நவம்பர், 2019

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ்

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2019 இதழ் 
 இந்த இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள்.
பொருளடக்கம் :
கீழடி அகழாய்வு கற்பிக்கும் பாடங்கள் -2
இறைவழிகாட்டுதல் இன்றி ஒழுக்க வாழ்க்கை இல்லை! -4
நபிமொழிகள் -5
இறைத்தூதர்கள் அங்கே வந்திருக்க வேண்டும்! -6
இயற்கை அல்ல.. இறைவனே வணக்கத்திற்குரியவன்!-8
இறையச்சம் நிகழ்த்தும் விந்தை -10
இயற்கையைக் கண்டு இறைவனை அறிவீர்! -11
மறுமை வாழ்வே நிலையானது -13
தன்மான உணர்வை மீட்டெடு தமிழா!-15
பண்டைத் தமிழர் மதம் இஸ்லாமா? -17
இஸ்லாம் என்றால் உண்மையில் என்ன? -18
திருமூலரின் சொற்களை மெய்பிக்கும் இஸ்லாம் -20

மனமாற்றமும் குணமாற்றமும் - தொழுகை வாயிலாக -23


வெள்ளி, 1 நவம்பர், 2019

நாம் இங்கு வந்ததன் பின்னணி

மனிதஇனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும். பகுத்தறிவு பூர்வமாக சிந்தித்தால் உண்மை என்ன என்பதை நாம் ஊகித்துதான் அறிய முடியும். ஏனெனில் நாம் அப்போது இருக்கவில்லை. இந்த விஷயத்தில் அறிவியல் ஆராய்ச்சிகள் ஏதும் சொல்வதாக இல்லை. அதே நேரத்தில் அதிநுட்பங்கள் வாய்ந்த இந்தப் பிரபஞ்சத்தில் வாழ்ந்து கொண்டு அதிநுட்பங்கள் வாய்ந்த ஒரு உடலுக்குள் இருந்து கொண்டு 'எல்லாமே தற்செயல்' என்று பிதற்றுவது அறியாமையின், சிந்தியாமையின் சிகரம்!
இனி பூமியின் மீது மனித தோற்றம் பற்றி வேறு யார் எதைக் கூறினாலும் நம்பினாலும் அவை உறுதியற்ற ஊகங்களாகவே அமையும். இந்நிலையில் இவ்வுலகையும் மனிதர்களையும் இன்னபிற ஜீவிகளையும் படைத்தவன் எவனோ அவன் நமக்கு எதைச் சொல்கிறானோ அது மட்டுமே உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது என்பதை சிந்திப்போர் அறியலாம். அதை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அணுகுவதே அறிவுடைமை. இன்னும் அதுவே நம் வாழ்க்கையின் உண்மைக் குறிக்கோளை அறியவும் அதை பயனுள்ள முறையில் செலவிடவும் உதவும்.
அந்த வகையில் நாம் பூமிக்கு வந்த வரலாற்றை இன்று உறுதியான முறையில் அறிய  நமக்குத்  துணை  நிற்பது  இறுதிவேதம் திருக்குர்ஆனும் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களின் கூற்றுக்கள் மட்டுமே. அதற்கான சில முக்கிய காரணங்கள் உள்ளன: 
= இறைவனிடமிருந்து அவனது இறுதித்தூதர் முஹம்மது நபி அவர்கள் மூலமாக வந்த திருக்குர்ஆன் பதினான்கு நூற்றாண்டுகள் ஆகியும் மூல மொழியிலேயே உலகெங்கும் ஒரே போல பாதுகாக்கப்பட்டு வருகிறது.
=  இலட்சக்கணக்கான மக்களால் மூலமொழியிலேயே அந்த வசனங்கள் மனப்பாடமும் செய்யப்பட்டு உள்ளதால் எந்த ஒரு மாற்றங்களுக்கும் அது இரையாவதில்லை.
=  நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடும் வரலாற்று உண்மைகளோடும் அற்புதமான முறையில் பொருந்திப் போகிறது.
= அரபு மொழியில் அதன் உயர்ந்த இலக்கியத் தரம்அதன் தீர்க்கதரிசனங்கள் மெய்ப்பிக்கப்பட்டு வருதல்வசனங்களின் முரண்பாடின்மைஅறிவியல் வளர்ச்சியால் புதிதுபுதிதாக கண்டுபிடிக்கப்படும் நிரூபிக்கப்பட்ட உண்மைகளோடு முரண்படாமை  இன்னும் இவைபோன்ற பல அற்புத குணங்களால் திருக்குர்ஆன் தன்னை ஒரு முழுமையான நம்பத்தகுந்த இறைவேதம் என்பதை நிரூபித்து வருகிறது. இது பற்றிய ஐயம் நீங்க இதைப் படியுங்கள்: 

நமது பின்னணியை அறியும் முன்..
இறைவேதம் திருக்குர்ஆன் மூலம் நமக்கு அறியக் கிடைக்கும் பூமியில் நமது தோற்றத்தின்  வரலாற்று சுருக்கத்தினை நாம் கீழே காண இருக்கிறோம்.  இது தொடர்பான திருக்குர்ஆன் வசனங்களைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் வாசகர்களாகிய  நாம் நமது நிலையைப் பற்றி சற்று நினைவுகூர வேண்டும்:
மனிதனின் அற்ப நிலை
= இம்மாபெரும் பிரபஞ்சத்தில் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப் பந்தின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரு நுண்ணிய துகள் போன்றவர்கள் நாம். நம்மில் ஓவ்வொருவரது ஆயுளும் நீர்க்குமிழி போல மிகமிக அற்பமானதே. ஒரு அற்பமான இந்திரியத்துளியிலிருந்து உடல் பெற்று உருவாகி வளர்ந்து மறையக் கூடியவர்கள் நாம்.
= இவற்றின் படைப்பிலோ இயக்கத்திலோ கட்டுப்பாட்டிலோ ஒரு துளியளவு கூட நம் பங்களிப்பு என்பது இல்லை. மட்டுமல்லநாம் நமது என்று சொல்லிக்கொள்ளும் நம் உடல் பொருள் ஆவி என இதில் எதுவுமே நமது அல்லஇவற்றின் கட்டுப்பாடும் முழுமையாக நம் கைவசம் இல்லை.
= நாம் இங்கு வருவதும் போவதும் - அதாவது நம் பிறப்பும் இறப்பும் – நம் விருப்பப்படி நடப்பது அல்ல.
= மனித குலத்தின் ஒட்டு மொத்த அறிவு என்பது நமது முன்னோர்கள் இதுவரைத் திரட்டித்தந்தவைமனிதகுலம் இதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் விளைவாக பகுத்தறிந்தவைமற்றும் அவர்கள் பகிர்ந்து கொண்டவைநாம் சுயமாக ஐம்புலன்களின் வாயிலாக அறிந்த தகவல்களை வைத்து பகுத்தறிந்தவை என பலவும் அவற்றில் அடங்கும். இவை ஒட்டுமொத்தத்தையும் ஒரே இடத்தில் திரட்டினாலும் அது இப்பிரபஞ்சத்தைப் பற்றிய முழுமையான அறிவு என்று கூற சற்றும் வாய்ப்பே இல்லை. அறிந்தது துளியளவு அறியாதது கடலளவு என்பது கூட மிகைப்படுத்தப்பட்ட உண்மையே!
திருக்குர்ஆன் வசனங்களின் இயல்பு
= அடுத்ததாக திருக்குர்ஆன் வசனங்கள் என்பவை இவ்வுலகைப் படைத்தவனால் அவனது  பரந்த அறிவில் இருந்து பகிரப்படுபவை. இம்மாபெரும் பிரபஞ்சத்தில் அற்பமான தோற்றமும் அற்பமான ஆயுளும் கொண்ட மனிதர்களாகிய நமக்கு இந்தக் குறுகிய பரீட்சை வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கூறுகிறான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மேலும் நமக்கு வாய்த்துள்ள அற்ப அறிவுக்கு எட்டாத பல விடயங்களும் இங்கு கூறப்படும் போது அவற்றை அவ்வாறே ஏற்றுக்கொள்வதே அறிவுடைமை. மாறாக நமது அற்ப அறிவைக் கொண்டு இவ்வுலக நடைமுறையோடு ஒப்பிட்டு அவை அறிவுக்குப் பொருந்தாதவை என்று வாதிடுவது வாதியின் அறிவீனத்தையே பறைசாற்றும் என்பதை நாம் அறியவேண்டும்.
மீண்டும் நினைவு கூருவோம். கீழ்கண்ட நிகழ்வுகள் நமது அறிவு எல்லைக்கு அப்பால் நடந்தவை. நமக்குப் பழகிய நிகழ்வுகளோடு ஒப்பீடு செய்து அல்லது நமக்கு எட்டிய அற்ப அறிவைக் கொண்டு இவற்றை ஒப்பீடு செய்து அணுகினால் அது குழப்பத்தையே தரும்.
பதங்கள் விளக்கம்:
வாசகர்கள் அறிந்து கொள்வதற்காக கீழ்கண்ட வசனங்களில் இடம்பெறும் சில பதங்கள் பற்றிய சுருக்கமான விளக்கங்கள் வருமாறு: 
அல்லாஹ்: இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனைக் குறிக்கும் சொல். இதன் பொருள் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது.
வானவர்கள் அல்லது மலக்குகள் : வானவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். (அரபு மொழியில் மலக்குகள் என்று வழங்கப்படும்) அவர்கள் ஆண்களுமல்ல பெண்களுமல்ல. அவர்கள் எப்போதும் இறைவனின் கட்டளைப்படியே நடப்பவர்கள். ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை தவறாது செய்து முடிப்பார்கள்.
ஜின்கள்: மனிதர்களைப் போலவே பகுத்தறிவும் விருப்ப உரிமையும் கொடுக்கப்பட்ட இனம். நெருப்பின் சுவாலையில் இருந்து படைக்கப்பட்டவர்கள்.  மனிதர்களைப் போலவே ஆண் பெண் மற்றும் சந்தானங்கள்நல்லவர்கள் கெட்டவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மற்றும் அல்லாதவர்கள் என இவர்களுக்குள்ளும் உள்ளனர்.
= வானவர்கள் ஒளியினாலும்ஜின்கள் நெருப்பினாலும்ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: முஸ்லிம்அஹ்மத்)
இப்லீஸ் மற்றும் ஷைத்தான்:
ஷைத்தான்கள் என்பவை ஜின் இனத்தைச் சேர்ந்தவை. இப்லீஸ் என்ற நபரின் வழித்தோன்றல்கள் தான் ஷைத்தான்கள். இப்லீஸ் என்பவன் தனி நபர். அந்தத் தனிநபரின் மூலம் உருவான கெட்ட சந்ததிகள்தாம் ஷைத்தான்கள். மனித மற்றும் ஜின் இனத்தைச் சார்ந்தவர்களின் மனங்களில் ஊசலாட்டத்தையும் தீய எண்ணங்களை விதைப்பதற்கு சக்தி பெற்றவர்கள் ஷைத்தான்கள்.
ஆதம்: முதல் மனிதரின் பெயர்.
மேற்கூறப்பட்ட எந்த இனங்களும் மனிதனின் தற்போதைய நிலையில் அவனது கண்களுக்குப் புலப்படாதவை என்பதையும் அவை அனைத்தும் மனிதன் படைக்கப்படுவதற்கு முன்னரே படைக்கப்பட்டவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனிதனைப் படைப்பதற்கு முன் நடந்த உரையாடலை நாம் கீழ்கண்டவாறு திருக்குர்ஆனில் காண்கிறோம்:

மனிதனின் படைப்புக்கு முன்னர்
2:30. (நபியே) இன்னும்உம் இறைவன் வானவர்களை நோக்கி நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோதுஅவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கிஇரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்துஉன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்அ(தற்கு இறை)வன் நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.
2:31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.
2:32. அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.
2:33. ஆதமே! அப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!” என்று (இறைவன்) சொன்னான்அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது நிச்சயமாக நான் வானங்களிலும்பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும்நீங்கள் வெளிப்படுத்துவதையும்நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்) கூறினான்.
2:34. பின்னர் நாம் வானவர்களை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்அவன் (இப்லீஸு) மறுத்தான்ஆணவமும் கொண்டான்இன்னும் அவன் சத்தியமறுப்பாளர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.
மேற்கண்ட வசனங்களில் இருந்து முதல் மனிதர் ஆதமுக்கு இறைவன் மற்ற இனங்களுக்கு வழங்காத அறிவை வழங்கி அவரை சிறப்பித்ததையும் அவருக்கு மரியாதை செய்யுமாறு மற்ற இனங்களை ஏவியதையும் இப்லீஸைத் தவிர மற்றவர்கள் யாவரும் சிரம் பணிந்ததையும் நாம் அறிகிறோம். வானவர்கள் எவ்வாறு மனிதர்கள் குழப்பம் விழைவிப்பவர்கள் அல்லது இரத்தம் சிந்துபவர்கள் என்பதை அறிந்து கொண்டார்கள் என்ற விடயம் நமக்குப் புதிராக இருக்கலாம். ஏற்கெனவே வாழ்ந்து கொண்டிருந்த ஜின் இனங்களின் செயல்பாடுகளைக் கண்டும் அவர்கள் அக்கேள்வி எழுப்பி இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது வழியில் இறைவனால் அவர்களுக்கு அதுபற்றிய அறிவு கொடுக்கப்பட்டு இருப்பதற்கும் வாய்ப்புண்டு. (இன்றுதான் ஒரு பொருளை தயாரிப்பதற்கு முன்னரே அதன் கம்ப்யுட்டர் ப்ரோடோடைப் செய்து அதைப் பற்றி கம்பெனிகள் விவாதிக்கும் முறையை அறிவோமே). இறைவனே மிக அறிந்தவன்.
சொர்க்கத்தில் குடியிருத்தல்
தொடர்ந்து நடந்தவற்றை கீழ்கண்ட வசனங்களில் காண்கிறோம்.
7:19. (பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) ஆதமே! நீரும்உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்துநீங்கள் இருவரும் உங்கள் விருப்பப் பிரகாரம் புசியுங்கள்ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்).
7:20. எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, “அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள்அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை” என்று கூறினான்.
7:21. நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்” என்று சத்தியம் செய்து கூறினான்.
7:22. இவ்வாறுஅவன் அவ்விருவரையும் ஏமாற்றிஅவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்றுஅவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு: உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையாநிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?” என்று கேட்டான்.
 சொர்க்கத்தில் இறைவன் புசிக்க வேண்டாம் என்று தடுத்த கனியை ஷைத்தானின் தூண்டுதலால் புசித்த பின் தாங்கள் செய்த தவறை உணர்ந்தார்கள் நமது ஆதி தந்தையும் தாயும். பிறகு இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரினர். திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
2:37. (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்அவன் மன்னிப்பை ஏற்பவன்நிகரற்ற அன்புடையோன்.
அவை என்ன வார்த்தைகள் என்பதை கீழ்கண்ட வசனம் கூறுகிறது:
7:23. அதற்கு அவர்கள், “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால்நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”  என்று கூறினார்கள்.
இறைவன் மன்னித்ததைத் தொடர்ந்து மனித இனம் பூமியில் குடியேற்றப்பட்டது. ஒரு தற்காலிகமான குறுகிய கால வாழ்க்கையை ஆதம் - ஹவ்வா தம்பதியினரும் அவர்களின் வழித்தோன்றல்களும் இங்கு கழிக்க இறைவன் பணித்தான்.
7:24. (அதற்கு இறைவன், “இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறதுஅதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு” என்று கூறினான்.
7:25. அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்” என்றும் கூறினான்.
பூமி வாழ்க்கையை ஒரு பரீட்சை வாழ்க்கையாக இறைவன் அமைத்துள்ளான். இதில் இறைவனின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப வாழ்பவர்கள் இந்தப் பரீட்சையில் வெல்கிறார்கள். அவர்கள் மீண்டும் சொர்க்கத்திற்குள் நுழைகிறார்கள். இறைவனையும் அவனது வழிகாட்டுதலையும் புறக்கணித்து வாழ்வோருக்கு நரகம் தண்டனையாக வழங்கப் படுகிறது. 
2:38. நாம் கூறினோம்: நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள். பிறகு உங்களுக்கு என்னிடமிருந்து நேர்வழி கிடைக்கும்போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லைஅவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
2:39. அன்றி யார் (அதை) ஏற்றுக்கொள்ள மறுத்துஎம்முடைய வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றார்களோ அவர்கள்தாம் நரகவாசிகளாவர்அவர்கள் அதிலேயே என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்!
 இதுதான் நாம் பூமிக்கு வந்ததன் சுருக்கமான வரலாறு!
================= 

இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?