இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 23 மார்ச், 2018

ஸ்டீபன் ஹாக்கிங் மறைவும் பாடங்களும்



உலகின் தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவரான பிரிட்டனைச் சேர்ந்த ஸ்டீபன் ஹாக்கிங் உடல் நலக்குறைவால் கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள அவரது இல்லத்தில் 14 மார்ச்சு 2018 அன்று காலமானார். அவருக்கு வயது 76. பெரும்பாலான உறுப்புகள் செயலிழந்துவிட்ட நிலையில்சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே அண்டம் தொடர்பான ஆராய்ச்சியில் பல மைல்கல் சாதனைகளை புரிந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங்.
இவர் தான் உருவாக்கிய கோட்பாடுகளைப் பற்றியும், அண்டவியல் தொடர்பிலும் பிரபலமான அறிவியல் கட்டுரைகளை எழுதிப் புகழ் பெற்றார். இவரது ‘காலத்தின் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ (A brief history of time) உலக சாதனை புரிந்த நூல்.
மரணம் பற்றிய ஹாக்கிங்கின் கண்ணோட்டம்

ஹாக்கிங் அவர்களைப் பற்றி ஜெர்மனியில் பணிபுரியும் இலங்கைத்தமிழ் இயற்பியலாளர் ராஜ் சிவா அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்:
ஹாக்கிங்கின்இறப்புக்காக அஞ்சலி செலுத்துவது எந்தளவில் ஏற்புடையது என்று தெரியவில்லை. காரணம் அவரைப் போன்ற குவாண்டம் கோட்பாட்டு இயற்பியலாளர்கள், இறப்பு என்பதை எப்படி வரையறை செய்து வைத்திருக்கிறார்கள். அதில் எந்தளவுக்கு உண்மை மற்றும் சாத்தியம்உள்ளது என்பது பலருக்குப் புரியாத விஷயம்.

எந்தப் பொருளானாலும் அது கட்டமைக்கப்பட்ட துகள்களை அழிப்பது என்பது சாத்தியமே இல்லை என்கிறது இயற்பியல். ஒரு பொருளின் அல்லது உயிரின் கட்டமைப்பிற்கான துகள்களை அழிக்கவே முடியாது. அத்துடன் அதன் சக்தியும் அழிந்து போகாது. இவை வேறு வடிவத்தில் உருவாக்கம் அடையலாமேயொழிய அழிக்க முடியாதவை. ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற உச்ச இயற்பியலாளர்கள், ஒரு உயிரின் அல்லது பொருளின் கட்டமைப்புக்கான இன்ஃபோர்மேசன்கள் கூட அழிக்க முடியாதவை என்று நம்புபவர்கள். அந்த இன்ஃபோர்மேஷன்கள் பிரபஞ்சத்திலுள்ள கருந்துளைகளின் சுவர்களில் பதிவுசெய்யப்பட்டு வருபவை என்றும்நிரூபிப்பவர்கள். ஸ்டீபன் ஹாக்கிங், லெனார்ட்சஸ்கிண்ட் ஆகியோரின் வாதங்களைப் படித்தவர்கள் இதைப் புரிந்து கொள்ளலாம்.

அதனால் ஸ்டீபன் ஹாக்கிங் என்ற ஒருவர், காற்றில் ஒரு மெழுகுவர்த்தியின் புகைபோல கலைக்கப்பட்டுவிட்டார் என்று மட்டுமே சொல்ல முடியும். முற்றாக இல்லாமல் போய்விட்டார் என்று கருத்து அவரிடமே இருந்திருக்காது. அவரிடம் மட்டுமில்லை. என்னிடமும் இதுபோன்றதொரு கோட்பாட்டு நிலைப்பாடே உண்டு. இறந்த பின்னரும் நாம்ஏதோவொரு வடிவத்தில் உயிர் வாழ்ந்துகொண்டிருப்போம் என்று இயற்பியல் ரீதியாக நம்புபவன் நான். -ராஜ் சிவா

ஹாக்கிங்கின் தாக்கம்
இவ்வுலகுக்கு ஹாக்கிங்கின் வருகை பற்பல நன்மைகளை வழங்கியுள்ளது என்பதும் ஒரு மாற்றுத் திறனாளியாக நின்று அவர் ஆற்றிய சாதனை பலருக்கும் தன்னம்பிக்கையை வளர்க்கக் கூடியதாக அமைந்தது என்பதும் அரும்பெரும் ஆராய்ச்சிகளுக்குப் பின் அவர் கண்டறிந்து உலகுக்கு அறிவித்த செய்திகள் அறிவியல் முன்னேற்றத்திற்கு மைல்கல்களாக அமைந்ததும் அனைவரும்அறிந்த உண்மைகளே. கடவுள் மற்றும் மறுமை பற்றிய அவரது சில கூற்றுக்கள் பலரை நாத்திகத்திற்கு கொண்டு சென்றன என்பதும் உண்மையே. ஒரு தலைசிறந்த அறிவியலாளர் சொல்லியிருக்கும் போது அது உண்மையாகாமல் இருக்குமா என்ற எண்ணம் பலரையும் தடுமாற்றத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

அறிவியலில் எல்லைகள் 
அறிவியல் என்றால் என்ன, அதன் எல்லைகள்எதுவரை என்பதை அறிய முற்படாமையே மேற்படி தடுமாற்றத்திற்குக் காரணமாகிறது.
அறிவியல் என்றால் என்ன என்ற அடிப்படைக் கேள்விக்குப் பலரும் பல்வேறு விதமான விடைகளைத் தரக்கூடும். பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்படும் விடை, “நம்மைச்சுற்றியுள்ள அனைத்தையும் புரிந்துகொள்ளவும், உலகமும்இயற்கையும் எப்படி இயங்குகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளவும் மனிதர்கள் மேற்கொள்ளும் ஒரு தொடர்ச்சியான, ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சியே அறிவியல்” என்பதுதான்.

மனிதனே அறிவியலின் மையக்கரு. அதாவது அற்ப ஆயுள் கொண்ட ஆறடி மனிதனின்புலன்களுக்கு நேரடியாகவும் கருவிகள் மூலமாகவும் வந்தடையும் தகவல்களை (sensible data) அடிப்படையாக்கொண்டு உருவாவதே அறிவியல். இம்மாபெரும் பிரபஞ்சத்தில் தற்காலிகமாக மின்னி மறையும் ஒரு மிகமிக நுண்ணிய துகள் போன்ற ஒரு ஜீவி அதற்கு மட்டும் விசேஷமாகக் கொடுக்கப்பட்டுள்ள பகுத்தறிவு என்ற ஆற்றலைக் கொண்டு இப்பிரபஞ்சத்தில் புதைந்து கிடக்கும்இரகசியங்களை துருவித்துருவி ஆராய்ந்தறியும் முயற்சியே அறிவியல் என்றும் கூறலாம்.

இந்த சிறு முயற்சியில் மனித அறிவுக்கு எட்டிய அறிவு என்பது இன்னும் எட்டாத அறிவோடு ஒப்பிடுகையில் கடலில் ஒரு துளி போன்றதே. ஆனால் அதுவே அனைத்துக்கும் இறுதியானது (ultimate) என்று இறுமாந்திருப்பது அறிவின்மை அல்லவா? அறிவியல்ஆராய்ச்சிகளின் அடிப்படையே ‘அறிந்தது கைமண் அளவு அறியாதது உலகளவு’ என்ற உண்மைதான். அனைத்தையும் அறிந்துவிட்டோம் மேற்கொண்டு அறிவதற்கு எதுவும் இல்லை என்ற நிலை வந்துவிட்டால் அறிவியல் ஆராய்ச்சிகள் அர்த்தமற்றவை. நாம் வாழும் பேரண்டத்தைப் பொறுத்த ஆராய்ச்சிகளிலும் சரி அணுகூறுகளுக்கு உள்ளே நிகழும் ஆராய்ச்சிகளிலும் சரி வெளி எல்லையும் உள் எல்லையும் இன்னும்கண்டறியப்படாதவை என்பதை அறிவோம். கண்டறியப்படாதவை என்பதை விட அருகே கூட அறவே நெருங்க முடியாதவை என்பதே உண்மை. ஏனெனில் நமது அறிவாற்றல் என்பதும் மிகமிக அற்பமான ஒன்றே.

மனிதனுக்கு இறைவன் வழங்கிய ஏனைய ஆற்றல்களைப் போல அறிவாற்றலும் இறைவனால்வரையறுக்கப்பட்ட ஒன்றே. இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் யூதர்கள் சிலர் ரூஹ் (உயிர்) என்பது என்ன? என்ற கேள்வியை எழுப்பினார்கள் அப்போது இறைவனிடம் இருந்து கீழ்கண்ட வசனம் அருளப்பட்டது:
= நபியே!) ரூஹைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள். அதற்கு நீங்கள் "அது எனது இறைவனின் கட்டளையால் ஏற்பட்டது. (அதைப் பற்றி) வெகு சொற்ப ஞானமேயன்றி உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. (ஆதலால், அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியாது)" என்று கூறுங்கள். (திருக்குர்ஆன் 17:85
நூல்: புகாரி 125

எவ்வளவுதான் உலகம் போற்றும் அறிவியல்மேதையாயினும் ஒருவர் அற்பமான அறிவை தற்காலிகமாக தாங்கி நின்று மறைந்து போகும் மனித இனத்தைச் சார்ந்தவர் என்பதால் அவரது அறிவியல் சார்ந்த கருத்தேயானாலும் அது இறுதியானது அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள கடமைப்பட்டுள்ளோம். காரணம் இங்கு மேலே குறிப்பிட்டவாறு ஆராய்ச்சி எல்லைகள் வரையறுக்கப் படாதவையாக இருக்கின்றன. அவ்வாறிருக்கும்போது அறிவியலுக்கு அப்பாற்பட்ட கருத்துக்களை எப்படி இறுதியானவை என்று கொள்ள முடியும்?

அறிவியலையே முடக்கும் நிலைப்பாடு
புலன்களால் அல்லது கருவிகளால் அறியமுடியாத அல்லது அறியாத எதையும் அப்பட்டமாக ‘இல்லை’ என்று மறுப்பது அறிவியல் ஆராய்ச்சிகளை முடக்கிப்போடும் செயலாகும். மாறாக ‘தெரியாது’ என்ற நிலைப்பாட்டைத் தொடர்ந்து ‘அது இருக்கக்கூடும்’ அல்லது ‘ அதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன’ என்ற நிலைபாட்டை மேற்கொள்வதால்தான் அறிவியல் முன்னேற்றமே சாத்தியமாகிறது. உதாரணமாக அணு என்பதுதான் உடைக்கமுடியாத மிகச்சிறிய பதார்த்தம்என்ற நிலைப்பாட்டுக்கு ஒரு காலத்தில் வந்தது. அப்போது அதுவே இறுதியானது என்று முடிவெடுத்திருந்தால் அதற்குப்பின் நடந்த எவ்வளவு அறிவியல் முன்னேற்றங்களை அது முடக்கிப்போட்டு இருக்கும் என்பதை நீங்கள்ஊகிக்க முடியும்.

உதாரணமாக அண்டவியலில் பிரபஞ்ச விரிவாக்கத்தின் பின்னணியில் காலக்சிகளுக்கு இடையே அவற்றைப் பிணைத்து வைத்திருக்கும் சக்தியும் அபாரமான வேக வளர்ச்சியோடு விரிவாக்கத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் சக்தியும் என்னவென்றே அறியப்படாதவை. அந்தக் காரணத்துக்காக அவற்றை இல்லையென்று மறுக்காமல் அவற்றை கரும்பொருள் மற்றும் கருஞ்சக்தி (dark matter, dark energy) என்று பெயரிட்டு அவற்றின் இருப்பை ஏற்பதைத்தான் அறிவியல் அணுகுமுறையிலும் காண்கிறோம். ஆனால் தன் ஆய்வு எல்லைக்கே தட்டுப்படாதவற்றை இல்லை என்று அப்பட்டமாக மறுத்தால் அது அறிவீனமும் அராஜகமும் அல்லாமல் வேறு என்ன? அந்த அராஜகத்தின் விளைவாக சமூகத்தில் உருவாகும் தான்தோன்றித்தனத்திற்கும் குழப்பங்களுக்கும் ஒழுக்க சீர்கேடுகளுக்கும் இறைவனிடம் தண்டனைகள் காத்திருக்கின்றன.

= அப்படியல்ல; அவர்கள்அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில்பொய்யெனக் கூறுகிறார்கள்; இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக. (திருக்குர்ஆன் 10:39)

ஆன்மீகத்தோடுள்ள அணுகுமுறை
காலம் செல்லச்செல்ல இவ்வுலகில் காணும் படைப்பினங்களைப் பற்றிய அறியாமையை அகற்றும் வேலையை தனது அயராத ஆராய்ச்சிகள் மூலம் அறிவியல்செய்துவருகிறது. ஆனால் மனித வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் அதுவே தீர்வு வழங்கும்என்று நம்பியிருப்பது பெரும் ஏமாற்றத்தையும் இழப்பையுமே கொண்டுவரும். உதாரணமாக மனிதவாழ்வின் நோக்கம், மனிதன் இங்கு வந்ததன் பின்னணி, மனித வாழ்வில் சரி எது தவறு எது, நியாயம் எது அநியாயம் எது என்பதற்கான அளவுகோல் போன்ற பலவற்றையும் அறிவியல் நமக்கு சொல்லித்தராது. அறிவியல் சொல்லட்டும் பிறகு பார்க்கலாம் என்று காத்திருந்தால் பல முக்கியமான விடயங்களை நாம் இழக்கவேண்டி வரும். அது இழப்பு என்பதை விட கடுமையான விபரீதங்களையும் சந்திக்க நேரிடலாம். அறிவியல்கூறுவதுதான் இறுதி (ultimate) என்று எடுத்துக் கொண்டு அதற்கு அப்பாற்பட்டவற்றை அப்பட்டமாக மறுத்தால் ஆன்மிகம் கூறும் மறுமை வாழ்வில் நரகத்தையும் ஒருவர் அடைய நேரிடலாம். அதுவும் நிரந்தர வாழ்விடம்!
= (நபியே!) எவன் நம்முடைய அறிவுரையைப் புறக்கணிக்கின்றானோ, மேலும், உலக வாழ்க்கையைத் தவிர வேறெந்த குறிக்கோளும் அவனுக்கு இல்லையோ அவனை அவனது நிலையிலேயே விட்டுவிடும். இவர்களின் அறிவின் எல்லை அவ்வளவுதான்! அவனுடைய பாதையை விட்டுப் பிறழ்ந்தவர் யார்; நேரான வழியில் இருப்பவர் யார் என்பதனை இறைவனே நன்கறிகின்றான்! (திருக்குர்ஆன் 53: 29,30) 

-----------------------------------------
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html
இஸ்லாம் என்றால் என்ன ?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக