இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 17 ஜனவரி, 2026

சிறைவாசிகளை சீர்திருத்திடும் இறைநம்பிக்கை!


சிறைவாசிகளை சீர்திருத்திடும் இறைநம்பிக்கை!

சிறைச்சாலைகள் சமூகப் பாதுகாப்பிற்காக அவசியமானவை. ஆனால் அவை தண்டனை வழங்கும் இடங்களாக மட்டுமே செயல்பட்டால், குற்றங்கள் குறையாது. ஒரு மனிதன் உண்மையில் திருந்த வேண்டும் என்றால்,
அவனுக்குள் மனமாற்றம் (inner transformation) நிகழ வேண்டும். அந்த மனமாற்றத்தை உருவாக்கும் சக்தியாக இஸ்லாமிய இறைநம்பிக்கை செயல்படுகிறது.

  1. மனிதனை அல்ல, தீய தூண்டுதலையே எதிரியாகப் பார்க்கும் பார்வை

இஸ்லாம் மனிதனை பிறவியிலேயே கெட்டவன் என்று பார்க்கவில்லை.
அவனை தவறுக்கு தள்ளுவது ஆசை, கோபம், பேராசை மற்றும் ஷைத்தானின் தூண்டுதல் என விளக்குகிறது.

நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குத் தெளிவான எதிரி.” (குர்ஆன் 35:6)

இந்த அணுகுமுறை சிறைவாசியின் மனதில் நான் கெட்டவன்” என்ற அவநம்பிக்கையை உடைத்து, நான் திருந்த முடியும்” என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது. இதுவே சீர்திருத்தத்தின் முதல் அடித்தளம்.

பகுத்தறிவு பூர்வமான இறைநம்பிக்கை

இஸ்லாமிய இறைநம்பிக்கை கண்மூடி நம்பிக்கை அல்ல. மனிதனை சிந்திக்க, ஆராய, தன் செயல்களின் விளைவுகளை புரிந்து கொள்ள அழைக்கிறது.

என் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்; இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” (குர்ஆன் 6:80)

இதனால் சிறைவாசி தன் வாழ்க்கைத் தவறுகளுக்கு வெளிப்புற சூழலை மட்டுமே குறை கூறாமல், தன் தேர்வுகளுக்குப் பொறுப்பு எடுத்துக்கொள்ளும் நிலைக்கு வருகிறான்.

உள்ளார்ந்த கண்காணிப்பு (Inner moral surveillance) – ‘யாரும் பார்க்கவில்லை’ என்ற மாயை உடைபடும் இடம்

சிறையில் காவலர் கண்காணிப்பு இருக்கலாம். ஆனால் அது மனிதனை
வெளிப்புறமாக மட்டுமே கட்டுப்படுத்தும். இஸ்லாமிய இறைநம்பிக்கை
மனிதனுக்குள் ஒரு வலுவான உள்ளார்ந்த கண்காணிப்பை உருவாக்குகிறது.

அவன் கண்களின் மோசடியையும் உள்ளங்களில் மறைந்ததையும் அல்லாஹ் அறிகிறான்.” (குர்ஆன் 40:19)

தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?” (குர்ஆன் 90:7)

அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா?” (குர்ஆன் 90:8)

இந்த வசனங்கள் யாரும் பார்க்கவில்லை; எனவே நான் விரும்பியது செய்யலாம்” என்ற மனித மனநிலையை பகுத்தறிவு கேள்வியால் உடைக்கின்றன.
இந்த உணர்வே தனிமையிலும் தவறு செய்யாமல் வாழ வைக்கும் உண்மையான கட்டுப்பாடு.

பாவமன்னிப்பு (தவ்பா) – நம்பிக்கையுடன் கூடிய புதிய தொடக்கம்

இஸ்லாம் குற்றம் செய்த மனிதனை நம்பிக்கையற்றவனாக மாற்றவில்லை.
தவ்பா (பாவத்திலிருந்து திரும்புதல்) என்ற வாய்ப்பை எப்போதும் திறந்தே வைத்துள்ளது.

என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையை நம்பிக்கை இழக்காதீர்கள்.”
(குர்ஆன் 39:53)

இந்த நம்பிக்கை சிறைவாசியின் மனச்சுமையை குறைத்து, புதிய வாழ்க்கையைத் தொடங்கும் தைரியத்தை அளிக்கிறது.

ஒழுக்கப் பயிற்சி – நடைமுறை சீர்திருத்தம்

தொழுகை, நோன்பு, துஆ போன்ற இஸ்லாமிய வழிபாடுகள் வெறும் ஆன்மிகச் சடங்குகள் அல்ல.

  • ஐவேளைத் தொழுகை வாழ்க்கையில் ஒழுக்கமும் ஒழுங்கும் பேண வைக்கிறது
  • நோன்பு தன்னடக்கப் பயிர்ச்சி
  • துஆ மன அமைதி, தன்னம்பிக்கை, இறைநெருக்கம்

இவை அனைத்தும் சிறைவாசியின் கோபம், அவசரம், அசட்டுத்தனத்தை கட்டுப்படுத்தி, ஒரு ஒழுக்கமான வாழ்க்கைக்குத் தயாராக்குகின்றன.

அனுபவ சாட்சி – அமெரிக்க சிறைகள்

அமெரிக்க சிறைகளில் இஸ்லாமைத் தழுவிய பல கைதிகள் வன்முறை குறைந்தவர்களாக, ஒழுக்கம் கொண்டவர்களாக மாறியுள்ள சம்பவங்கள்
பரிசோதனையாகப் பார்க்கப்பட்டுள்ளன.

மால்கம் எக்ஸ் ஒரு குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டவர். ஆனால் இஸ்லாமை அறிந்தபின் அவர் சிந்தனையாளர், சமூக மாற்றக் குரல் ஆக மாறினார்.

அவர் வாழ்க்கை ஒரு உண்மையைச் சொல்கிறது:

சிறை மனிதனை சீர்கெடுக்கவும் முடியும்; அல்லது சரியான இறைநம்பிக்கை இருந்தால் அவனை சீர்திருத்தவும் முடியும். உத்தமன் ஆக்கவும் முடியும்.

ஆக, இஸ்லாமிய இறைநம்பிக்கை சிறைவாசியை பயத்தால் கட்டுப்படுத்தவில்லை.
அறிவு, பொறுப்பு, நம்பிக்கை மூலம் அவனை மாற்றுகிறது.

 நீ கெட்டவன் அல்ல. நீ தவறிழைத்தாய். ஆனால் நீ திருந்த முடியும்.”

இந்தக் கோட்பாட்டை சிறைச் சீர்திருத்தத்தின் மையமாக்கினால், சிறைச்சாலைகள்
தண்டனை மையங்களாக அல்ல; மனிதனை மீட்டெடுக்கும் உண்மையான சீர்திருத்த மையங்களாக மாற முடியும்.

============= 

சிறைச்சாலைகளை ஏன் சீர்திருத்த வேண்டும்?

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

ரீல் (Reel) அல்ல ரியல் (Real)!


ரீல் அல்ல ரியல்!

நரகம் பற்றிய வர்ணனைகள் 

நரகம் என்பது இவ்வுலக வாழ்க்கையில் இறைவனுக்குக் கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்துவரும் தீயோர் மறுமையில் தண்டனை அனுபவிக்கப் போகும் இடம். அங்கு ஒரு நிருபர் நின்று கொண்டு அங்கு காணும் காட்சிகளை வர்ணித்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட வருணனைகளைத்தான் திருக்குர்ஆனில் பல இடங்களில் காண்கிறோம். இறைவன் என்பவன் காலத்திற்கு அப்பாற்பட்டவன். 

நம் புரிதலுக்கு சொல்வதென்றால் இறைவன் முக்காலத்தையும் உணர்பவனும் காண்பவனும் ஆவான். நம்மைப் பொறுத்தவரை இவை நாளை நடப்பவை. ஆனால் இறைவனோ அவற்றை நேரடியாகக் காண்கிறான்.  அதனால்தான் திருமறையின் சில வசனங்கள் எதிர்காலத்தில் நடக்கப் போவதை அறிவிப்பது போலவும் மற்றும் சில நடந்துகொண்டு இருப்பதை அறிவிப்பது போலவும் இருப்பதை நீங்கள் காணலாம். உதாரணமாகக் கீழ்கண்ட வசனங்களைப் பாருங்கள்:

78:21-30. வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது.

23. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள்.

24. அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள்.

25. கொதி நீரையும், சீழையும் தவிர.

26. இது செயலுக்கேற்ற கூலி!

27. அவர்கள் விசாரணையை நம்பாதிருந்தனர்.

28. நமது வசனங்களை ஒரேயடியாகப் பொய்யெனக் கருதினர்.

29. ஒவ்வொரு பொருளையும் எழுத்தில் வரையறுத்துள்ளோம்.

30. சுவைத்துப் பாருங்கள்! உங்களுக்கு வேதனையைத் தவிர வேறு எதையும் அதிகமாக்க மாட்டோம்.


56: 42-55 அவர்கள் (தீயோர்) அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள்.

44. அதில் குளிர்ச்சியும் இல்லை. இனிமையும் இல்லை.

45. இதற்கு முன் அவர்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

46. பெரும் பாவத்தில் பிடிவாதமாக இருந்தனர்.

47, 48. ''நாங்களும் முந்தைய எங்களின் முன்னோர்களும் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும் போது உயிர்ப்பிக்கப்படுவோமா?'' என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

49, 50. ''முந்தையவர்களும், பிந்தையவர்களும் அறியப்பட்ட ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று திரட்டப்படுவார்கள்'' என்று கூறுவீராக!

51, 52. பொய்யெனக் கருதிக் கொண்டு வழி கேட்டில் இருந்த நீங்கள் பின்னர், ஸக்கூம் எனும் மரத்திலிருந்து உண்பீர்கள்.

53. அதனால் வயிறுகளை நிரப்புவீர்கள்.

54. அதற்கு மேல் கொதி நீரைக் குடிப்பீர்கள்.

55. தாகம் கொண்ட ஒட்டகம் குடிப்பது போல் குடிப்பீர்கள்.

இறைவன் நம் அனைவரையும் நரக வேதனையில் இருந்து காப்பாற்றுவானாக!

=================

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

சிறைச்சாலைகளை ஏன் சீர்திருத்த வேண்டும்?

 குற்றங்களின் அதிகரிப்பு

NCRB வெளியிடும் Crime in India அறிக்கைகளின்படிஇந்தியாவில் அறிவிக்கப்படும் குற்றங்கள் கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனகுறிப்பாக IPC cognizable crimes (கொலைகொள்ளைபாலியல் குற்றங்கள்வன்முறை குற்றங்கள்) எண்ணிக்கையில் உயர்வு காணப்படுகிறது.

அதிலும் சைபர் குற்றங்கள் மிக வேகமாக உயர்ந்துள்ளனஆன்லைன் மோசடிஅடையாள திருட்டுடிஜிட்டல் பண மோசடிகள் ஆண்டுதோறும் கணிசமாக அதிகரிப்பதாக NCRB பதிவு செய்கிறது. நகரமயமாக்கல்தொழில்நுட்ப பயன்பாடுவேலைவாய்ப்பு அழுத்தம் போன்றவை இதற்குக் காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.

மேலும்பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்புடைய குற்றங்கள் பல மாநிலங்களில் அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் காட்டுகின்றன. அதே நேரத்தில்பல குற்றங்களில் குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் குற்றம் செய்யும் (recidivism) போக்கு இருப்பதும் ஒரு முக்கிய சிக்கலாக பதிவாகிறது.

சிறைகளின் மற்றும் சிறைவாசிகளின் அவலநிலை

NCRB புள்ளிவிவரங்களின் அடிப்படையில்

தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் (NCRB) புள்ளிவிவரங்கள்இந்திய சிறைச்சாலைகள் தண்டனை மையங்களாக மட்டுமே செயல்படுவது போதாது என்பதை தெளிவாக காட்டுகின்றன. Prison Statistics India அறிக்கைகளின்படிஇந்திய சிறைகளில் உள்ள கைதிகளில் சுமார் 70–75% பேர் விசாரணைக்கைதிகள்குற்றம் நிரூபிக்கப்படாத நிலையிலேயே நீண்ட காலம் சிறையில் இருப்பதுமனஅழுத்தம் மற்றும் விரக்தியை அதிகரித்துதிருந்தும் வாய்ப்பை குறைக்கிறது.

மேலும்பெரும்பாலான சிறைகள் கொள்ளளவை விட அதிகமாக நிரம்பியுள்ளன. Overcrowding காரணமாக அடிப்படை வசதிகள்கல்விமனநல ஆலோசனை போன்ற சீர்திருத்த முயற்சிகள் சரியாக வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் சிறைவாசம் என்பது குற்றச் சிந்தனைகள் வளரக் கூடிய சூழலாக மாறுகிறது.

NCRB தரவுகள் சிறைகளில் மனநலப் பிரச்சினைகள்தற்கொலை முயற்சிகள் மற்றும் இயற்கையற்ற மரணங்கள் இடம்பெறுவதை சுட்டிக்காட்டுகின்றன. இது சிறைவாசிகள் எதிர்கொள்ளும் ஆழமான மன அழுத்தத்தை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில்பெரும்பாலான கைதிகள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்களிலிருந்து வருவதுகுற்றம் ஒரு சமூகப் பிரச்சினை என்பதையும் உணர்த்துகிறது.

ஆகவே, NCRB புள்ளிவிவரங்கள் கூறும் உண்மை இதுதான்:
சிறைச்சாலைகள் தண்டனை இடங்களாக அல்லமனிதனை மாற்றும் சீர்திருத்த மையங்களாக மாற வேண்டும்.


குற்றங்களின் அபாயகரமான அதிகரிப்பு

ஒவ்வொரு காவல் நிலையத்திலும்குற்றங்களின் அபாயகரமான அதிகரிப்பு தொடர்பான புள்ளிவிவரங்களைக் காட்டும் அட்டவணைகளையும் வரைபடங்களையும் நாம் காணலாம். இவை காவல் நிலையங்களில் பதிவானவை மட்டுமே. பதிவு செய்யப்படாதவை இன்னும் எவ்வளவு அதிகம் என்பது பற்றி நம்மால் ஊகிக்க  முடியும். மக்கள் இந்தச் சூழ்நிலையால் விரக்தியடைந்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே! நாளுக்கு நாள் நிலைமை  மோசமாகி வருகிறது. இப்போது நம்மில் ஏறக்குறைய அனைவரும் இந்தச் சூழ்நிலையை மாற்ற ஏதாவது செய்ய விரும்புகிறோம்ஆனால் அதை எப்படிச் செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம்.

சீர்கெடுக்கும் சிறைச்சூழல்

இன்றைய சிறை அமைப்பு பெரும்பாலான இடங்களில் குற்றவாளியை சீர்திருத்துவதற்குப் பதிலாக அவனை மேலும் சீர்கெடுக்கும் சூழலாக மாறியுள்ளது. இதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

1. சிறைச் சூழல் ஒரு குற்றம் கற்கும் பள்ளியாக மாறுதல்: சிறையில் சிறிய குற்றம் செய்தவர்கள் பெரும் குற்றவாளிகளுடன் கலப்பதால், புதிய குற்ற யுக்திகள், வன்முறை சிந்தனைகள் அவர்களுக்குள் வளர்கின்றன.

2. மனநல அழுத்தமும் கோபமும்- நீண்ட தனிமை, மரியாதையற்ற நடத்தல்,
எதிர்காலம் குறித்த அச்சம் போன்றவை மனதை கடுமையாக்கி திருந்தும் எண்ணத்தையே முற்றாக அழிக்கிறது.

3. அவமதிப்பு மற்றும் மனிதத் தன்மை இழப்புகுற்றவாளி” என்ற அடையாளம் மனித மதிப்பை சிதைக்கிறது. அவன் தன்னை சமூகத்தின் பகுதியென உணர முடியாமல் போகிறான்.

4, சீர்திருத்த வாய்ப்புகளின் பற்றாக்குறை- கல்விதொழில் பயிற்சி, மனநல ஆலோசனை போதிய அளவில் இல்லாததால், உள்ளார்ந்த மாற்றம் நிகழ்வதில்லை.

5. வெளியே வந்த பின் சமூக நிராகரிப்பு-  வேலைமரியாதை, புதிய தொடக்கம் கிடைக்காததால், மீண்டும் குற்றம் செய்வதே வாழ்வாதாரமாக மாறுகிறது.

 இதனால் இன்றைய சிறைச் சூழல் மீள் குற்ற உற்பத்தி நிலையமாக மாறி வருகிறது. சிறிய குற்றவாளிகளை பெரிய குற்றவாளிகளாக மாற்றுகிறது.

சிறைகளை சீர்திருத்த முடியுமா?

முடியும் என்கிறது நபிகளாரின் நடைமுறை! இந்த முயற்சியில் பொருள் ரீதியாகவோ அல்லது வேறு விதமாகவோ நமக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. குறைந்தபட்சம் பின்வரும் நன்மைகளையாவது பெறலாம்:

 சிறிய குற்றவாளிகளைப் பெரிய குற்றவாளிகளாக உருவாக்கும் சிறைச்சாலைகளின் தற்போதைய போக்கு முடிவுக்கு வரும். அதற்குப் பதிலாகநாட்டில் அமைதி மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்குப் பங்களிக்கக்கூடிய  திருந்திய குடிமக்கள் சிறைகளிலிருந்து வெளியே வருவார்கள். அவர்களை மேலும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்தலாம்.

 சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்கும்காவல் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளையும்அவற்றில் உள்ள கைதிகள் மற்றும் ஊழியர்களையும் பராமரிப்பதற்கும் செலவிடப்படும் பணத்தை அரசாங்கங்கள் சேமிக்க முடியும்.

=============== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
=============    
திருக்குர்ஆன் நற்செய்திமலர் உங்கள் இல்லம்தேடி வர ₹180 சந்தா கட்டி  சந்தாதாரர் ஆகலாம் இன்ஷாஅல்லாஹ்  https://wa.me/p/33176695991945755/918867298998

 

புதன், 31 டிசம்பர், 2025

புதிய ஆண்டு – புதிய மனிதன்


 
ஒவ்வொரு புதிய ஆண்டும் மனிதனின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிறுத்தமாக அமைகிறது.

கடந்த நாட்களை நினைவுபடுத்தி, எதிர்காலத்தை நோக்கி சிந்திக்க வைக்கும் ஒரு தருணம் அது. காலண்டரில் ஒரு வருடம் மாறுவது இயல்பான நிகழ்வு.
ஆனால் மனிதனின் சிந்தனை, பழக்கம், வாழ்க்கை நோக்கம் மாறவில்லை என்றால் அந்த “புதிய ஆண்டு” பெயரளவில் மட்டுமே புதியதாக இருக்கும்.

உலகம் புதிய ஆண்டை ஒன்றுகூடல், கொண்டாட்டம், கும்மாளம், இசை, மது அருந்துதல், பட்டாசு வெடித்தல், தீர்மானங்கள் என்ற அளவிலேயே பார்க்கிறது.
ஒரு இரவு உற்சாகம், ஒரு நாள் மகிழ்ச்சி— என எல்லாம் அன்றோடு முடிந்து விடுகிறது.
ஆனால் இஸ்லாம் புதிய ஆண்டை சுய பரிசீலனைக்கும் சீர்திருத்தத்திற்குமான வாய்ப்பாக பார்க்கிறது.
மனிதன் தன்னைத் தானே நேர்மையாகக் கேள்வி கேட்க வேண்டிய நேரமாக அதை மாற்றுகிறது.

திருக்குர்ஆன் மனிதனுக்கு மாற்றத்தின் அடிப்படை விதியை தெளிவாக அறிவிக்கிறது:

ஒரு சமூகத்தின் நிலையை அவர்கள் தாங்களே மாற்றாத வரை
இறைவன் அவர்களின் நிலையை மாற்றமாட்டான்.”
(திருக்குர்ஆன் 13:11)

இந்த வசனம் மாற்றம் வெளியில் இருந்து வராது, அது மனித உள்ளத்திலிருந்து தான் தொடங்க வேண்டும் என்பதை உறுதியாகச் சொல்கிறது.
சிந்தனை மாறாமல் செயல் மாறாது. செயல் மாறாமல் வாழ்க்கை மாறாது.
அதனால்தான் உண்மையான மாற்றம் வெளிப்புற சூழலில் அல்ல—
உள்ளம் சார்ந்த சீர்திருத்தத்தில் இருக்கிறது.

மனிதன் பெரும்பாலும் வேலை, வசதி, சூழல் மாறினால் வாழ்க்கை மாறிவிடும் என்று நினைக்கிறான். ஆனால் உள்ளம் மாறாத வரை அந்த மாற்றங்கள் தற்காலிகமாகவே இருக்கும்.

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இதை தெளிவாகச் சொன்னார்கள்:
கவனியுங்கள்! மனித உடலில் ஒரு சிறிய துண்டு உள்ளது. அது சீரானால் முழு உடலும் சீராகும். அது கெட்டுப் போனால் முழு உடலும் கெடும்.
கவனியுங்கள்! அதுதான் உள்ளம் (கல்பு).”  (புகாரி, முஸ்லிம்)

  • புதிய மனிதன்” என்பவன் பிழையில்லாத மனிதன் அல்ல.
  • -    ஆனால் பிழையை உணர்ந்து திருந்த முயலும் மனிதன்.
  • -    அவன் நேரத்தை மதிப்பவன்.
  • -    கோபம், ஆசை, அகந்தை ஆகியவற்றை கட்டுப்படுத்த முயல்பவன்.
  • -    தனக்கு மட்டுமல்ல— குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பொறுப்புடன் வாழும் மனிதன்.

இந்த புதிய ஆண்டு நம்மிடம் ஒரு முக்கியமான முடிவை எதிர்பார்க்கிறது:
நாம் காலண்டரை மட்டும் மாற்றிவிட்டு கடந்து போகிறோமா?
அல்லது உள்ளத்தை மாற்றி அதன்வழி ஒரு புதிய மனிதனாக உருவாகப் போகிறோமா?

உண்மையான புதிய ஆண்டு அந்த தீர்மானத்திலிருந்தே தொடங்குகிறது.

  • தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டவன் நிச்சயமாக வெற்றி பெற்றான்.” (திருக்குர்ஆன் 91:9)

  • அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர்தாம் பெரும் பாவிகள் ஆவார்கள். (திருக்குர்ஆன் 59:19)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

=================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_9390.html

ஞாயிறு, 14 டிசம்பர், 2025

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் – டிசம்பர் 25 இதழ்

 


திருக்குர்ஆன் நற்செய்தி மலர் – டிசம்பர் 25 இதழ்

திருக்குர்ஆன் நற்செய்திமலர் உங்கள் இல்லம்தேடி வர இந்த லிங்கை நீங்கள் க்ளிக் செய்து சந்தாதாரர் ஆகலாம் இன்ஷாஅல்லாஹ்  https://www.tayyib-hope.in/product/30713872/Thiru-Quran-Narcheithi-Malar-1-Year-Subscription

 பொருளடக்கம்:

இயேசுவை நேசிக்கும் இருபெரும் சமூகங்கள் -2

இயேசுநாதர் குறித்து இஸ்லாம்  சொல்லும் முக்கிய உண்மைகள்-4

சந்தேகங்களுக்கு இடமில்லா வேதம் -7

நஜ்ரான் கிறிஸ்தவர்களை பள்ளிவாசலுக்குள் வரவேற்ற நபிகளார்! -8

இயேசு பேசிய முதல் வார்த்தைகள்! -10

இயேசு நாதர் பற்றிய  100 % உண்மைகள் இறுதி ஏற்பாட்டில்! -11

இறைவனை மட்டுமே வணங்கச் சொன்னார்கள் இருவரும்! -13

இயேசுவின் இரட்சகன் அல்லாஹ்! -15

மரியாளின் மகிமையை பறைசாற்றும் குர்ஆன் -16

மனித சமத்துவத்தை மறுக்க மதத்தை பயன்படுத்தியவர்கள்   -18

இறைத் தூதர்கள் அனைவரையும் ஏற்பது கடமை! -20

மரியாளின் தாயார் செய்த பிரார்த்தனை -21

இயேசுநாதரின் இரண்டாம் வருகை -22


புதன், 26 நவம்பர், 2025

சொர்க்கமும் நரகமும் உண்மையா?

 


மறுமை வாழ்க்கையே உண்மையானது   

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது பரீட்சைக்காக கெடுதியையும் நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர் நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 21:35)
இங்கு இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு மறுமையில் சொர்க்கத்தைப் பரிசாக வழங்குகிறான். கட்டுப்படாமல் தான்தோன்றித் தனமாக வாழபவர்களுக்கு தண்டனையாக நரகத்தை வழங்குகிறான்.
·  நமது உண்மையான மற்றும் நிலையான முடிவில்லாத வாழ்க்கை என்பது மரணத்துக்குப் பிறகு உள்ள வாழ்க்கைதான். அது ஒன்று சொர்க்கத்தில் அமையும் அல்லது நரகத்தில் அமையும். இவை இரண்டும் அல்லாத வேறு ஒரு வாழ்க்கை கிடையாது.
·  இன்று நமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கை என்ற வாய்ப்பு ஒரே ஒரு முறை கிடைப்பது. மீண்டும் மீண்டும் பிறப்பது என்பது கிடையாது. அதுவும் அவரவரது மரணம் வரை மட்டுமே இவ்வாய்ப்பு நீடிக்கும்.
 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும் அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான் உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்¢ எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
·  எனவே இவ்வாழ்க்கை என்ற பரீட்சையில் சஞ்சலங்களுக்கு இடம் கொடாமல் உன்னிப்பாக, கவனமாக  ஒழுங்குற செயல்பட்டால் நாம் நிரந்தர இன்பங்கள் நிறைந்த மற்றும் சொர்க்கத்தை சென்றடைவோம். ஆனால் இப்பரீட்சையை உதாசீனமாக எடுத்துக்கொண்டு தான்தோன்றித்தனமாக செலவிட்டால் நாம் சென்று வீழ்வது நரகப்படுகுழியில்தான் அதுவோ முடிவில்லாத நிரந்தரமான இருப்பிடமாகும்.
மறுமை சாத்தியமா?
·  சொர்க்கம் நரகம் என்பது கற்பனையோ மாயையோ அல்ல என்பதை  சற்று சிந்தித்தால் உணரலாம். சாதாரண ஒரு இந்திரியத் துளியில் இருந்து உருவாகி இன்று பூமியில் நடமாடிக்கொண்டிருக்கிறோம். இது எப்படி வாஸ்தவமோ அதைவிட வாஸ்தவம் அது, இதை நடத்திக்கொண்டிருக்கும் இறைவனுக்கு நம்மை மீண்டும் படைப்பது என்பது கடினமானது அல்ல.
''மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையாஅவ்வாறிருந்தும்அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.மேலும்அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டுஅவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ''எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?'' என்று. (நபியே!) நீர் கூறுவீராக! ''முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்'' என்று(திருக்குர்ஆன் 36: 77-79)
·  இறுதித்தீர்ப்பு நாளின்போது ஒவ்வொரு மனிதனும் இப்பூமியின் மீது செய்த புண்ணியங்களும் பாவங்களும்  எடுத்துக்காட்டப் படும். புண்ணியங்களை அதிகமாக சம்பாதித்தவர்களுக்கு சொர்க்கம் விதிக்கப்படும் பாவங்களை அதிகமாக சம்பாதித்தவர்களுக்கு நரகம் விதிக்கப்படும்.

சொர்க்கம் என்பது எப்படி இருக்கும்?
·  அது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடம். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது.. தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம்! என்றும் இளமையோடு இருக்கும் இடம்! காரணம் மரணம் என்பது இனி இல்லையல்லவா?
இதோ தனது திருமறையில் இறைவன் கூறுகிறான்:
 நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான் இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும். (திருக்குர்ஆன் 10:9)
பொன் தட்டுகளும்கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும் இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும்கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன.  இன்னும், 'நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!' (என அவர்களிடம் சொல்லப்படும்.) (திருக்குர்ஆன் 43:71)

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும்தன் சுவை மாறாத பாலாறுகளும்அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும்தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும்அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும்தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்துகொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா(திருக்குர்ஆன் 47:15)

எவர்கள் இறைநம்பிக்கைகொண்டுநற்காரியங்கள் செய்கிறார்களோ அவர்களைசதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில்நிச்சயமாக நாம் அமர்த்துவோம். அவற்றில் அவர்கள்நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள். (இவ்வாறாக நற்)செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது. (திருக்குர்ஆன் 29:58)


நரகமும் காத்திருக்கிறது
·  சொர்க்கத்தைப் போலவே நரகமும் மறுபுறம் காத்திருக்கிறது. அது இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்த கொடியோருக்காகவும் இறைவனையும் அவன் தூதர்களையும் வேதங்களையும் நிராகரித்தோருக்காகவும் காத்திருக்கிறது. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் நடுவே மரணமற்ற வாழ்வும் அகோர பசியும் தாகமும் அதைத்தீர்க்க உணவாக முட்செடிகளும் கொதிநிலை அடைந்த பானங்களும் என்று தொடர் வேதனைகளின் இருப்பிடமாக இருக்கும். நரக வேதனைகள் பற்றி திருக்குர் ஆன் எச்சரிக்கிறது:
 நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோஅவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது¢ அதில் அவன் மரிக்கவும் மாட்டான் வாழவும் மாட்டான். (திருக்குர்ஆன் 20:74)
அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம். (திருக்குர்ஆன் 7:41) 
 யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்¢ அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களைஅவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:56)
 (நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை கரிக்கும்¢ இன்னும் அதில் அவர்கள் உதடு சுருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள். (திருக்குர்ஆன் 23:104)
 ஆனால் எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோஅவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் - அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம் அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு: 'எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்'' என்று அவர்களுக்குச் சொல்லப்படும். (திருக்குர்ஆன் 32:20)
நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.  வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக!  அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.! (திருக்குர்ஆன் 78:21)
 (நபியே!) இன்னும் நீர் கூறுவீராக: 'இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது¢' ஆகவேவிரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்¢ அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்¢ மிகக் கேடான பானமாகும் அது! இன்னும் இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். (திருக்குர்ஆன் 18:29)
ஆக, நரக வேதனை என்பது தாங்க முடியாதது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் நாம் மரணத்திற்கு முன்பாக இறைவனிடம் மன்னிப்பு கோரி திருந்திய வாழ்க்கை வாழவேண்டும். இறைவன் நம் அனைவரையும் நரகிலிருந்து காப்பானாக! சொர்க்கம் செல்லும் நன்மக்களில் நம்மை சேர்த்து வைப்பானாக!
=================== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_9390.html