இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஆகஸ்ட் 24


 திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஆகஸ்ட் 24 

பொருளடக்கம்: 

எப்படி சாத்தியமானது மனிதகுல சமத்துவம்? -2

முஹர்ரம் மாதமும் மூடநம்பிக்கைகளும் -4

முஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது? -6

இறைத்தூதரின் பிரார்த்தனை - 9

உறவுகளைப் பேணுதல் என்ற வழிபாடு - 10

தானமாகக் கொடுத்ததை திரும்பப் பெறுதல் - 12

அவரிடம் அப்படியென்ன சிறப்பு? - 13

பிலாலே உம்மிடம் என்ன சிறப்பு? - 14

நாட்டுப்பற்று – ஒரு அரசியல் கருவி! -15

உண்மையான நாட்டுப்பற்று ! - 17

தீமைகளில் இருந்து மக்களைக் காப்பதும் நாட்டுப்பற்றே!  - 19

பிள்ளைகளுக்கிடையே பாரபட்சம் - 22

வரலாற்று இருட்டடிப்புக்கு  உள்ளான மக்கள் தலைவன் திப்பு! 23

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

எங்கள் உயிரைக் காப்பாற்றிய பள்ளிவாசல் மினாரா!




 #எங்கள்_உயிரை_காப்பாற்றிய பள்ளிவாசல் மினாரா ஒலிபெருக்கி.

வெளியே ஏதோ பயங்கர சப்தம் கேட்டு தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தேன்.
கவனித்துக் கேட்டபோது பக்கத்திலுள்ள பள்ளி வாசலிலிருந்து உரத்த குரலில் தக்பீர் சொல்வதைக் கேட்டேன்.
பலர் சேர்ந்து தக்பீர் சொல்கின்றனர். விடியற்காலை பாங்கு சொல்வதற்கான நேரமாகவில்லை.
“நிலச் சரிவு ஏற்பட்டுள்ளது.
அனைவரும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள்“
என்றும் தக்பீருக்கிடையே அவர்கள் கூறுகின்றனர்.
இதைக் கேட்டதும் தொட்டிலில் உறங்கிக் கிடக்கும் குழந்தையை வாரி எடுத்து, மற்றவர்களையும் எழுப்பி வீட்டிலிருந்து வெளியே வந்தேன்.
அதற்குள் வீட்டு முற்றத்தில் தண்ணீர் நிரம்பியிருந்தது. அப்போதும் பள்ளி வாசலிலிருந்து தக்பீர் தொனி நிறுத்தப்படிருக்கவில்லை.
வெளியே வந்த நான் சுற்றிலும் பார்த்தேன். கும்மிருட்டு.
இந்தக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு இந்த நடுச்சாமத்தில் நான் எங்கு செல்வேன் இறைவா……..!
மீண்டும் பள்ளியிலிருந்து அறிவிப்பு.
யாரும் வெளியே நிற்க வேண்டாம்,
பள்ளி வாசலுக்கு வாருங்கள்!.
ஆண்கள் மட்டும் செல்லும் அந்தப் பள்ளிவாசலுக்கு
இந்துப் பெண்ணான நான் போக முடியுமா? பயத்தால் தொண்டை வரண்டு செய்வதறியாமல் திகைத்து நிற்கும்போது பள்ளி வாசலிலிருந்து சிலர் டார்ச்சு லைட்டுடன் எங்களை நோக்கி வந்தனர்.
“சகோதரி இந்தப் பிள்ளைகளுடன் இங்கே நிற்காதீர்கள்.
பள்ளி வாசலுக்கு வாருங்கள்“ என்று அழைத்தனர் அவர்கள். அப்போதுதான் மகிழ்ச்சி வரும்போது கண்ணீர் வரும் என்பதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.
பள்ளிக்குச் சென்றபோது
எல்லா ஜாதி, மதத்தினரும் அங்கேயிருப்பதைக் கண்டேன்.
காலை புலர்ந்தபோது பள்ளியின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபோது எங்கள் வீட்டின் கூரையை மட்டுமே காண முடிந்தது.
பள்ளியின் மின் விசிறி ஊக்கில் பழைய சாரியால் கட்டிய தொட்டிலில் மகளை தூங்கச் செய்துக் கொண்டிருந்தபோது ஒரு பழைய சம்பவம் நினைவு வந்தது.
ஒரு நாள் மைதீனுடன் எனது கணவரின் தம்பி ஹரி வீட்டிற்கு வந்தான்.
ஒரு பேப்பரை நீட்டி என்னிடம் சொன்னான் “அண்ணி! இதில் கையொப்பமிட்டு தாருங்கள்!”
“எதற்காகக் கையெழுத்து என்று கேட்டுக் கொண்டே அந்தப் பேப்பரை நான் வாங்கியபோது. என்னுடைய மகன் அதை என்னிடமிருந்து வாங்கிப் படித்து பார்த்து விட்டு “அம்மா இதில் கையெழுத்திட வேண்டாம். சித்தப்பாவுக்கும், மைதீன் காக்காவுக்கும் பைத்தியம்” என்றான்.
மகன் இப்படிச் சொன்னபோது மைதீன் சொன்னான் “உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.”
அந்தப் பேப்பரை நான் படித்துப் பார்த்தேன். மாவட்ட ஆட்சியருக்கு எழுதப்பட்ட ஒரு புகார் மனு அது..
“ஐயா! எங்களுடைய வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு கட்டடம் கட்டுகின்றனர்.
அது ஒரு முஸ்லிம் பள்ளிவாசல் என்று அறிந்தோம்.
கட்டடம் கட்டி முடிந்தால் அங்கு பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கி எங்கள் பிள்ளைகள் படிப்பதற்குச் சிரமத்தை உருவாக்கும். எனவே அந்தக் கட்டடம் கட்டுவதைத் தடுத்த நிறுத்த வேண்டும்”
அந்தப் பேப்பரைக் கீறி எறிந்து விட்டு “குடிப்பதற்கு ஏதாவது வேண்டுமா?” என்று அவர்களிடம் கேட்டேன்.
“இதற்கான விளைவை நீங்கள் அனுபவிப்பீர்கள்“ என்று சொல்லி விட்டு அவர்கள் திரும்பிச் சென்றனர்.
அவர்கள் சொன்னது சரிதான்.
நான் அனுபவிக்கின்றேன். இந்த பள்ளியில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் அதில் ஒரு பங்கு எனது மக்களின் கைகளுக்குக் கிடைக்காமலிருப்பதில்லை.
இன்று அந்தப் பள்ளி மினாராவின் ஒலிபெருக்கி எங்கள் உயிர்களை காப்பாற்றியது.
அன்றைய அந்த சம்பவத்தை நான் எண்ணிப் பார்க்கின்றேன். ஹரியை அனைவரும் அறிவர்.
அவன் இப்போது பழைய ஹரி அல்ல.
ஆனால் இந்த மைதீன் ....?.
இந்த உலகத்தின் மிகப் பெரிய பிரச்சனை தவறான எண்ணம். யாரோ ஒருவர் சொல்வதை நம்பி விடக் கூடாது.
சத்தியத்தைத் தேடி புரிந்துக் கொள்ள வேண்டும்.
#கவளப்பாறை நிலச் சரிவின்போது இறந்து போனவர்களின் போஸ்ட்மார்ட்டம் பள்ளி வாசலில் நடந்தது.
சமீபத்தில் வயநாடு #குன்னம்பற்றயில் இறந்த சந்தோஷ் என்பவரின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட இடம் #பள்ளி_வாசல்.
ஒரு முஸ்லிம் அல்லாத ஏழைப் பெண்ணின் திருமணம்
#சேரமான் பள்ளியில் நடைபெற்றது
பிரளய காலத்தில் மக்கள் பள்ளிகளிலும்,கோவில்களிலும், சர்சுகளிலும், மதரஸாக்களிலும், பள்ளிக்கூடங்களிலும் தூங்கினர். பள்ளிகளுக்கும், கோவில்களுக்கும் இதுபோன்ற ஏராளமான #நன்மைகளின்_கதைகள்
சொல்வதற்கு உண்டு.
மூவாற்று புழா தட்டம்பரம்பு ஜும்மா பள்ளிவாசல் மினாரா ஸ்பீக்கர் மூலம் அந்த ஏரியாவில் இறந்தவர்களின் மரண அறிவிப்பு ஜாதிமத பேதமின்றி அறிவிக்கப்படுகிறது.

எனவே முதலில் மனிதன் ஆக வேண்டும்.
அதன்பின் போதும் ஜாதியும், மதமும்.......
ஒரு ஆபத்தில் சிக்கி நடுரோட்டில் வீழ்ந்து கிடக்கும் போது வந்து உதவுபவர் யாரென்றோ, கடைசியில் ஒரு துள்ளி தண்ணீர் தருபவர் யாரென்றோ முற்கூட்டி அறிய முடியாத காலம்வரை எவ்வித வகுப்பு வாதத்துக்கும் இடமில்லை....

வியாழன், 1 ஆகஸ்ட், 2024

நலம் பயக்கும் நட்பு


📓
நபி (ஸல்)
 அவர்கள் கூறினார்கள்:


தோழர்களில் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் அவர்களில் யார் தன்னுடைய தோழரிடத்தில் சிறந்தவராக இருக்கிறாரோ அவராவார் (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) திர்மிதி 

📓உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று(குணத்தால்) ஒத்துப் போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன. (ஆயிஷா(ரலி) புகாரி 

📓 நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்து விடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர். (அபூமூசா (ரலி) புகாரி )

📓குற்றவாளியிடம், உங்களை நரகத்தில் சேர்த்தது எது? என்று விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம் (அல்குர்ஆன்: 74 : 40-45)

📓நபி (ஸல்)  அவர்கள் கூறினார்கள்:

யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ அல்லாஹ்விற்காக வெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காக மறுக்கிறாரோ அவர் தான் இறைநம்பிக்கையைப் புரணப்படுத்திக் கொண்டவர் (அபூஉமாமா(ரலி) அபூதாவூத் )
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)


📓
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வேறொரு ஊரில், இருக்கும் தன் சகோதரனை சந்திப்பதற்காக ஒருவர் சென்றார். அவர் செல்லும் வழியில் ஒரு வானவரை அல்லாஹ் அவரிடத்தில் அனுப்பினான். அந்த வானவர் அவரிடத்தில் வந்தபோது நீங்கள் எங்கே செல்ல நினைக்கிறீர்கள்? எனக் கேட்டார். அதற்கு அவர் இந்த ஊரில் உள்ள எனது சகோதரனை சந்திக்கச் செல்கிறேன் என்று கூறினார். உங்களுக்கு சொந்தமான எதையாவது அவர் உங்களுக்கு தர வேண்டியுள்ளதா? என்று கேட்டார். அதற்கு இல்லை. கண்ணியமானவனும் சங்கையானவனுமான அல்லாஹ்விற்காக அவரை நேசிக்கிறேன் என்று கூறினார். அந்த வானவர் நீங்கள் யாருக்காக அவரை நேசித்தீர்களோ அவன் உங்களை நேசிக்கிறான் என்பதை உங்களிடம் (கூற வந்த) அல்லாஹ்வின் தூதராவேன் நான் எனக் கூறினார்.

(அபூஹூரைரா(ரலி) முஸ்லிம் )

📓 அல்லாஹ் கூறுவதாக, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் விஷயத்தில் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்பவர்களுக்கும், என் விஷயத்தில் அமர்பவர்களுக்கும் என் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவு செய்பவர்களுக்கும் எனது பிரியம் உறுதியாகி விட்டது. (முஆத் (ரலி) அஹ்மத்(21114)

📓அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்றுக் கூறுவான் (அபூஹூரைரா(ரலி) முஸ்லிம் 4655)

📓அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் அந்தஸ்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். சஹாபாக்கள், அவர்கள் யார்? என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ, கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறி விட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை படித்துக் காட்டினார்கள்.

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அபூதாவூத் 3060)

📓அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனக்கு விரும்புவதை தன்னுடைய சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆக முடியாது.
(அனஸ் (ரலி) புகாரி 13)

📓அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான்.அவனுக்கு அநீதி இழைக்கவும் மாட்டான்,அவனை கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான்.எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகிறாரோ அவரின் மறுமை நாளின் துன்பத்தை அல்லாஹ் நீக்குகிறான். எவர் ஒருவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவரின் குறைகளை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்கிறான். (அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) புகாரி  
========================================== 

தனிமனித சீர்திருதத்திற்கும் சீரழிவுக்கும் உள்ளமும் சூழலும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. மேற்குறிப்பிட்ட ஹதீஸ் தனிமனித வாழ்வில் சூழல் ஏற்படுத்தும் பாதிப்புப் பற்றி விளக்குகிறது. நபி (ஸல்) அவர்கள் அதனை அழகிய உதாரணத்தினூடாக விளக்குகிறார்கள்.

சூழல் எனும் போது பெற்றோர், உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் கருத்திற் கொள்ளப்படுகின்றனர். ஒரு குழந்தையின் வாழ்வில் ஆரம்பமாக பாதிப்பை ஏற்படுத்துவோர் பெற்றோர்களாவர் எனவே தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :
“ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாத்தில் தான் பிறக்கிறது. அதனது பெற்றோர்களே அதனை யஹூதியாக, கிறிஸ்தவராக, நெருப்பு வணங்கியாக மாற்றி விடுகின்றன.”


“ஒருவர் தனது நண்பனின் மார்க்கத்தில் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் தன் நட்பு கொள்கின்றவரை நன்றாக அவதானிக்கட்டும்.” (ஆதாரம் : அபூதாவூது).


“அந்த நாளில் அக்கிரமக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு நம் தூதருடன் நானும் நேரான வழியில் சென்றிருக்க வேண்டாமா? என்று கூறுவான். அன்றி அய்யோ பாவம் செய்யும்படி தூண்டிய இன்ன மனிதனை என்னுடைய சிநேகிதனாக ஆக்கிக் கொள்ள வேண்டாமா? என்னிடம் நல்லுபதேசம் வந்தது. பின்னரும் அதிலிருந்து அவன் தன் என்னை வழி கெடுத்து விட்டான். அந்த ஷைத்தான் மனிதனுக்குப் பெரும் சதிகாரனாக இருந்தான் (என்றும் கைசேதப்படுவான்).” (சூரா அல் ஃபுர்கான் : 27 : 2)

“இறைவிசுவாசிகளைத் தவிர்த்து வேறு யாருடனும் தோழமை கொள்ளாதே! இறையச்சமுள்ளவனைத் தவிர வேறு யாரும் உனது உணவை உண்ண வேண்டாம்.” (அபூதாவுது, திர்மிதி)

“முஃமினான ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் நேசர்களாக இருக்கின்றனர். நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொள்கின்றனர்.” ( திருக்குர்ஆன் 9 : 71)
============= 
திருக்குர்ஆன் நற்செய்தி மலர் சந்தா செலுத்தி சந்தாதாரராக விரும்புபவர்கள் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்.
======================= 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?


சிட்டுக்குருவிக்கு ஏன் கட்டுப்பாடு?


பறப்பது சிட்டுக்குருவி ஆனாலும் பருந்தானாலும் அல்லது
அற்பமான தேனியே ஆனாலும் அவை சுதந்திரமாக பறக்க
முடிவது அவற்றைப் படைத்தவன் வகுத்த ஒழுங்கையும்
கட்டுப்பாடுகளையும் அந்த ஜீவிகளின் உடல் முழுமையாகப்
பின்பற்றுவதால்தான்! அதனால் அவை தம் இலக்குகளை
எளிதாக அடைகின்றன..
அதைப் போலவே மனிதனும் அவனைப் படைத்தவனுக்குக்
கட்டுப்படும்போது அவனது வாழ்வும் எளிதாகும். ஆம்
ஒழுங்கும் கட்டுப்பாடுகளும் வாழ்வை இனிதாக்கும்!

----------------------------------- 

ஒரு வெள்ளைக் காகிதத்தில் கடிதம் அல்லது கட்டுரை எழுத முற்படுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். முதலில் கடிதத்தின் எல்லைகளை வரையறுக்க கீழும்  பக்கவாட்டிலும் மார்ஜின் போட்டு ஒழுங்குபடுத்துவோம். எழுதத் துவங்கும்போது  கடித வரிகள் ஒன்றன்கீழ் ஒன்று சீராக இருக்க ரூல் போடுகிறோம். எழுத நினைப்பதை வாக்கியங்களாகப் பிரிக்கிறோம். வார்த்தைகளுக்கிடையே ஒரே மாதிரியான ஸ்பேஸ் விட்டு வரிகளை எழுதுகிறோம். ஒரு கட்டுரை எழுத நினைத்தால்முன்னுரைமுக்கிய உரைமுடிவுரை என தரம் பிரித்து பத்திகள் பிரித்து எழுதுகிறோம். இவ்வாறு வரம்புகளும் வரையறைகளும் விதிமுறைகளும் பேணுவது எதற்காக

அப்போதுதான் நாம் எழுதுவது ஒரு அர்த்தமுள்ள கட்டுரையாகவோ அல்லது கவிதையாகவோ அல்லது ஒரு காவியமாகவோ ஆகும். பிறரால் படிக்கவும் இரசிக்கவும் முடியும். மாறாக ஒரு வெள்ளைத் தாளை எடுத்து மேற்கண்ட வரையறைகள் எதுவுமே பேணாமல் மனம்போன போக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதப்படுபவை எழுத்துக்களே ஆனாலும் அதை கிறுக்கல் என்றும் எழுதியவரை  கிறுக்கன் என்றும்தான் மக்கள் அழைப்பார்கள்!

வீடு கட்டினாலும்..

அதேபோல நீங்கள் ஒரு காலி மைதானத்தில் வீட்டை கட்ட நினைத்தாலும் முதலில் என்ன செய்வீர்கள்?

மைதானத்தில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வீட்டிற்கான எல்லை வகுப்பீர்கள். வரைபடம் வரைந்து வீடு கட்டுவதற்கு தேவையானவற்றை சேகரிப்பீர்கள். தொடர்ந்து தரையில் அஸ்திவாரம் போட கோடு போடுதல்,  குழி வெட்டுதல்வரையறுக்கப்பட்ட அளவையில் கலவை தயாரித்தல்அஸ்திவாரக் குழியில் கலவை போட்டு  அஸ்திவார  கற்களை குறிப்பிட்ட இடைவெளி விட்டு அடுக்குதல்கலவை போடுதல்அடுத்த வரிசை கற்களை அடுக்குதல் எனத் தொடங்கி இறுதியில் கூரை போட்டு முடிக்கும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் எல்லைகளையும் வரையறைகளையும் ஏவல்-விலக்கல்களையும் (do’s and don’ts) ஒழுங்கையும் (order) பின்பற்றியே வீட்டைக் கட்டி முடிக்கிறீர்கள். 

இனிமேற்கண்ட எந்த எல்லைகளையும் வரையறைகளும் ஒழுங்கையும் எல்லாம் புறக்கணித்து ‘என் வீடு இதுஎன் விருப்பம் எனது உரிமை’ என்று கூறிக் கொண்டு மனம்போன போக்கில் நடந்து கொண்டால் என்ன நடக்கும்மைதானத்தில் அங்கொரு குழி இங்கொரு குழி அங்கொரு கல் இங்கொரு கல் என ஒரு குப்பை மேடுதான் உருவாகி இருக்குமே தவிர குடியிருக்க ஒரு வீடு அங்கு அமையாது என்பதை அறிவோம். 

எல்லைகளும் கட்டுப்பாடுகளும்

இவ்வாறு நீங்கள் உணவு சமைப்பதாக இருந்தாலும்ஆடை தைப்பதாக இருந்தாலும்ஏதேனும் உபயோகமுள்ள ஒரு பொருளை தயாரிப்பதாக இருந்தாலும் அங்கெல்லாம் எல்லைகளையும் வரையறைகளையும் ஏவல்-விலக்கல்களையும் ஒழுங்கையும்  பின்பற்றினால்தான் அந்த முயற்சி பயனளிப்பதாக இருக்கும் என்பது  திண்ணம்!  மாறாக தான்தோன்றித்தனம் பயனுள்ள எதையுமே விளைவிக்காது என்பதும் தெளிவு! ஆகஎல்லைகளும் கட்டுப்பாடும்  ஒழுங்கும்தான் ஆக்கபூர்வமான எதையும் உருவாக்கும். 

 இவ்வாறு மனித வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எல்லைகளும் கட்டுப்பாடும்தான் அவற்றை பயனுள்ளதாக ஆக்குகின்றன. 

அதேபோல அவ்வாறு நீங்கள் தயாரித்த உணவானாலும் ஆடையானாலும் வீடானாலும் அவற்றை பயன்படுத்துவதற்கும் விதிமுறைகள் உள்ளன. உதாரணமாகமேலாடையைக் கீழாடையாக பயன்படுத்தவோசமைத்த உணவை சுவற்றில்  பூசவோமனிதர்களுக்காகக் கட்டிய வீட்டை மாட்டுத் தொழுவமாக பயன்படுத்தவோ  மாட்டோம். ஆகபொருட்களின்  தயாரிப்பு  விஷயத்திலும் சரிபயன்பாட்டு விஷயத்திலும் சரிநாம் யாருமே

தான்தோன்றித்தனமாக செயல் படுவதில்லை .  காரணம் நான் அதன் தீய விளைவுகளை நன்றாக அறிவோம்.

அப்படியானால் உலகத்திலேயே மாபெரும் தயாரிப்பான மனித உடலைப் பெற்றுக்கொண்டிருக்கும் நாம் அதன் பயன்பாட்டு விஷயத்தில்  தான்தோன்றித் தனமாக செயல்பட முடியுமா?

கண்டிப்பாகஇந்த மனித உடலின்  பயன்பாடு ஆக்கபூர்வமாக அமைய வேண்டுமானால் மன இச்சைக்கு அடிபணிந்து செயலாற்றுவதை விட இந்த உடலை வடிவமைத்து உருவாக்கியதோடு நில்லாமல் அதனை இடைவிடாது பரிபாலித்தும் வருபவன் எவனோ அவனது வழிகாட்டுதல்படி- அதாவது அவன் கற்பிக்கும் எல்லைகளையும் ஏவல்- விலக்கல்களையும் மதித்து-  செயல்படுவதுதானே முறை?

இதுதான் இஸ்லாம்

அந்த இறைவன் நமக்கு கற்பிக்கும் ஏவல்- விலக்கல்களைப் பேணி அவனது வழிகாட்டுதல் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே இஸ்லாம் என்று அறியப்படுகிறது. இஸ்லாம் என்ற வார்த்தையின் ஒரு பொருள் அமைதி என்பதாகும்அதன் இன்னொரு பொருள் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து வாழ்தல் என்பதாகும். அதாவது கீழ்படிதல் ( discipline) மூலம் பெறப்படும் அமைதியின் பெயரே இஸ்லாம் என்பதாகும்.

உலகம் என்ற  பரீட்சைக் கூடம் 

இப்போது புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி ஒப்புகொண்டாலும் சரி ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரிநீங்கள் வாழும் வாழ்க்கையைப் பற்றிய நிதர்சனமான உண்மை இதுதான். அதாவது இவ்வுலக வாழ்க்கையை  ஒரு பரீட்சையாக அமைத்துள்ள இறைவன் இந்த கீழ்ப்படிதலைத்தான் நம்மிடம் பரீட்சிக்கிறான். அதாவது யாராவது இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தால் -அதாவது  இறைவன் கற்பிக்கும் எல்லைகளையும் ஏவல் - விலக்கல்களையும்  பேணி  அதன்படி வாழ்ந்தால் - அவர்களுக்கு  இவ்வுலக வாழ்க்கையில் ஒழுங்கும் நல்லொழுக்கமும்  கைகூடுகிறது. அதன்மூலம் அவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ முடிகிறது

மேலும் மறுமை வாழ்க்கையில் அதற்குப் பரிசாக நிரந்தரமான சொர்க்கத்தையும் அடைகிறார்கள்.

  மாறாக யாரெல்லாம் இந்த உண்மையைப்  புறக்கணித்து, - அதாவது படைத்தவன் கற்பிக்கும் ஏவல்-விலக்கல்களை அலட்சியம் செய்து - அவனுக்குக்  கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக இந்த வாழ்க்கையை வாழ்கிறார்களோ   அவர்களுக்கு இம்மை வாழ்க்கையில் ஒழுக்கமும் ஒழுங்கும் உரிய முறையில் கைகூடுவதில்லை. தனி நபர் வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையும் சமூக வாழ்க்கையும் குழப்பங்கள் நிறைந்ததாக அமைகிறது. படைத்தவனை மதிக்காமல் அவன் விதித்த வரம்புகளை மீறிய குற்றத்திற்கு 

தண்டனையாக மறுமையில் நரகத்தை அடைகிறார்கள்.

 இறைவன் தனது இறுதிவேதத்தில் தெளிவாக அறிவிக்கிறான்: 

 = ஓவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைக்கக்கூடியதாகவே இருக்கிறதுதீமையை (துன்பங்களை)க் கொண்டும்நன்மையை (இன்பங்களை)க் கொண்டும் பரீட்சிப்பதற்காக உங்களை நாம் சோதிக்கிறோம்மேலும் நீங்கள் நம்மிடமே திருப்பப்படுவீர்கள்.(திருக்குர்ஆன்  21:35)

= திண்ணமாகநாம் இப்பூமியின் மீதுள்ள அனைத்தையும் அதற்கு அலங்காரமாய் ஆக்கியுள்ளோம்இவர்களில் மிகவும் சிறந்த செயலைச் செய்பவர் யார் என்று இவர்களை சோதிப்பதற்காக! (திருக்குர்ஆன் 18:7)

கீழ்படிந்த வாழ்க்கை மட்டுமே ஏற்புடையது 

இறைவன் ஏற்படுத்தியுள்ள இந்த வாழ்க்கை என்ற  பரீட்சையில்  மனிதர்கள் சுயமாக உருவாக்கிய வாழ்க்கை நெறிகளும்முன்னோர் வகுத்த நெறிகளும்நாத்திகர்கள் உருவாக்கிய வாழ்க்கை நெறிகளும்  தான்தோன்றித்தனமான வாழ்க்கை முறைகளும் எல்லாமே தோல்வியை சந்திக்கும். இறைவன் அவர்களைப் பார்த்து கேட்பதைப் பாருங்கள்:

இறைவனின்  மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றனமேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.(திருக்குர்ஆன் 3:83)

இவ்வுலகையும் அவர்களையும் படைத்தவன் பக்குவமான வாழ்க்கை நெறியை வழங்கியிருக்க அதைப் புறக்கணித்து உருவாக்கப்பட்டவை அவனுக்கு ஏற்புடையதல்ல என்பதை திட்டவட்டமாக அறிவிக்கிறான்: 

திண்ணமாகஇஸ்லாம் மட்டுமே இறைவனிடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) வாழ்க்கை நெறி  ஆகும். (திருக்குர்ஆன் 3:19)

அவ்வாறு வாழ்ந்து செல்பவர்களின் மறுமை நிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் இறைவன் இன்றே எச்சரிக்கிறான் :

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாதுமேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில்தான் இருப்பார்.(திருக்குர்ஆன் 3:85) 

=================== 

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் சந்தா செலுத்தி சந்தாதாரராக விரும்புபவர்கள் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://tayyib-hope.in/product/30713872/Thiru-Quran-Narcheithi-Malar-1-Year-Subscription.

======================= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?