இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 டிசம்பர், 2014

இயேசுநாதர் பற்றி 100 % உண்மைகள் --- இறுதி ஏற்பாட்டில்!

இயேசுநாதர் பற்றி 100 % உண்மைகள் - இறுதி ஏற்பாட்டில் !

 இங்கு கூறப்படும் உண்மைகளின் தரம் எப்படிப்பட்டது எனபதை வாசகர்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் இதுவரை இயேசுநாதரைப் பற்றி பலவற்றையும் கேள்விப் பட்டிருக்கலாம். காலாகாலமாக மக்கள் சொல்லிக்கொண்டு வருபவை, வேதபுத்தகங்களில் சொல்லப்பட்டவை, மதபோதகர்கள் சொல்பவை என பலவும் அதில் அடங்கும். ஆனால் நமக்குத்தேவை தெளிவான உண்மை.  இதுவரை நீங்கள் கேள்விப்பட்ட செய்திகளோடு ஒப்பிடும்போது நாம் திருக்குர்ஆனின்  ஆதாரத்தோடு தரும்   செய்திகள் கீழ்கண்ட சிறப்புக்களோடு தனித்து விளங்குகின்றன:

= நாம் இங்கே தரும் இயேசு (அலை) பற்றிய தகவல்கள் நூறு சதவீதம் உண்மையானனவை. இவற்றில் ஊகங்களோ கட்டுக் கதைகளோ இடம் பெறாது. அன்பின் மேலீட்டால் மனிதர்கள் உணர்ச்சிவசப்பட்டு புனைந்து கூறும் வர்ணனைகளோ ஆதாரமற்ற செய்திகளோ இருக்காது. மாறாக முழுக்க முழுக்க சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டதும்   இறுதி வேதமுமான திருக்குர்ஆன் தரும் செய்திகளாகும்.

12:111. (நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.

= எந்த இறைவன் பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் அருளினானோ அதே இறைவனால் இறுதி ஏற்பாடாக அருளப்பட்ட வேதமே திருக்குர்ஆன் எனபதை நீங்கள் அறிய முடியும். முந்தைய ஏற்பாடுகள் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட மக்களுக்காக அருளப்பட்டவை. ஆனால் திருக்குர்ஆன் உலகம் முழுமைக்கும் பொதுவானதாக இறுதிகாலம் வரை  மாற்றமில்லாமல் நிலைநிற்கக் கூடியதாக அருளப்பட்டிருக்கிறது. இது உண்மையா இல்லையா என்பதைப் பரிசோதிக்க நீங்கள் திருக்குர்ஆனின் ஒரு பிரதியை எடுத்து திறந்து பாருங்கள். அதில் குர்ஆன் வசனங்கள் மூல மொழியான அரபியிலும் அவற்றின் அருகே அதன்  மொழிபெயர்ப்பும் காணப்படும். அதே மூலமொழியிலேயே உலகெங்கும் குர் ஆன் ஓதப்பட்டு வருவதையும் காணலாம்.  ஆனால் முந்தைய ஏற்பாடுகளில் நீங்கள் மொழிபெயர்ப்புகளை மட்டும்தான் காண முடிகிறது  எனபதை அறிவீர்கள். மூலத்தை நீங்கள் பார்க்க முடிவதில்லை.

 = திருக்குர்ஆன் அருளப்பட்ட மொழியான அரபுமொழி இன்று பலநாடுகளில் புழக்கத்தில் உள்ள வாழும் மொழியாக இருக்கிறது. ஆனால் முந்தைய ஏற்பாடுகள் அருளப்பட்ட மொழிகள் ஏற்கெனவே இறந்துவிட்டன என்பதையும் அறிவீர்கள்.  ஒருவேளை அவ்வேதங்களின்  மூலங்களைத் தேடிக்கண்டுபிடித்தாலும் இன்று அவற்றை  சரிபார்ப்பது மிக மிகக் கடினம்.

=  திருக்குர்ஆன் என்பது முழுக்க முழுக்க இறைவனின் வார்த்தைகளை மட்டுமே கொண்டது. இதில் நபிகள் நாயகம் அவர்களுடைய வார்த்தைகளோ அல்லது மற்றெந்த மனிதர்களுடைய வாசகங்களோ கலக்கவில்லை. ஆனால் திருக்குர்ஆனுக்கு முன் அருளப்பட்ட ஏற்பாடுகள் அருளப்பட்ட காலத்தில் அவை இறைவார்த்தைகளை மட்டுமே உட்கொண்டிருந்தன. ஆனால் இன்று அவற்றில் இறை வார்த்தைகள், இறைத்தூதர்களின் வார்த்தைகள் மற்றும் பரிசுத்த ஆவியால் உந்தப் பட்டு அப்போஸ்தலர்கள் எழுதிய தகவல்கள்  ஆகியன கலந்திருப்பதை நீங்களே நன்றாக அறிவீர்கள்.

=  நபிகள் நாயகம் அவர்களின் கூற்றுக்களும்  அவர் பற்றிய செய்திகளும் தகவல்களும்  தனியாகத் தொகுக்கப்பட்டு ஹதீஸ் என்ற பெயரில் பாதுகாக்கப் பட்டுவருகின்றன. குர்ஆன் என்பது பரிசுத்த ஆவி என்று கிறிஸ்த்துவ சகோதரர்கள் கூறும் ஜிப்ரீல் (gaberiel)  என்ற வானவரால் இறைவன் புறத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பரிசுத்த வசனங்களின் தொகுப்பாகும்
கீழ்கண்ட கட்டுரைகளை ஒவ்வொன்றாகப் படிக்கும்போது உங்களுக்கு உண்மை விளங்கும்
திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும்

திருக்குர்ஆன் 100% பாதுகாக்கப்படும் வேதம் 

= திருக்குர்ஆன் சந்தேகங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் அப்பாற்பட்ட இறைவேதம்

திருக்குர்ஆன் அற்புதகரமாக தாங்கி நிற்கும் அறிவியல் உண்மைகள்

இவற்றைப் படித்துவிட்டு 

திருக்குர்ஆன் தமிழாக்கத்தை இங்கு படியுங்கள்:

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக. நாளை மறுமையில் அவனது நற்தூதர்களோடு சொர்க்கத்தில் வாழும் நற்பாக்கியத்தை தந்தருள்வானாக!




வாழ்நாள் நெடுகிலும் அற்புதங்கள்! அவரே இயேசு!

நமது மனித குலம் என்பது ஒன்றே ஒன்று. நமது இறைவனும் ஒரே ஒருவனே! எக்காலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்  எங்கு பிறந்தோரானாலும் நாம் ஒரே  குடும்பத்தைச் சேர்ந்தவர்களே! இதை நாம் ஒரு போதும் மறக்கக்கூடாது. இறைவன் தனது இறுதி மறைக் குர்ஆனில் தவறாமல் நினைவூட்டுகிறான்:
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
நம் மானிட குடும்பத்துக்கு வழி காட்ட இறைவன் அவ்வப்போது தன் தூதர்களை அனுப்பி உள்ளான். அவர்கள் அனைவரும் நம்மவர்களே என்பதுதான் உண்மை. இந்த பரந்த மனப்பான்மையோடு அணுகினால்  நாம் இன்று இழந்து விட்ட சகோதரத்துவ உணர்வை மீண்டும் நிலை நாட்ட முடியும்.
இறைவனின் தூதர்கள் இடையே வேற்றுமை பாராட்டக் கூடாது என்பது இறைக் கட்டளை (திருக்குர்ஆன் 2:285).  அந்த இறைத் தூதர்கள் வரிசையில் வந்தவரே நமது இயேசு (அலைஹிஸ்ஸலாம்-அவர் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்)
ஆம், சத்தியத்தை நிலைநாட்ட இப்பூமிக்கு வந்த மகத்தானதோர் இறைத்தூதர் ஏசு!
பிறந்த நாள் முதலே அற்புதங்கள்  பல நிகழ்த்திய மகான்!
அன்னை மரியாளுக்குப் பிறந்த அந்த அற்புதக்  குமாரன் அயராது  சத்திய போதனை செய்தார்!
அஞ்சா நெஞ்சனாக  அநீதிக்கும் அக்கிரமங்களுக்கும்  எதிராகப் போராடினார்! கடவுளின் பெயரால் பொய்யுரைத்து மக்களுக்கு இடையே பிளவுகள் உண்டாக்கும் மதகுருமார்களையும் மக்கள் சுரண்டப் படுவதையும் தீவிரமாக எதிர்த்தார்.
விளைவு ?...........அநீதியாளர்களின் சூழ்ச்சிக்கு ஆளானார் ஏசு!  அவரைக் கொன்று சத்தியத்தின் வளர்ச்சியை தடுக்க சதி செய்தனர் எதிரிகள் !
ஆனால் வல்ல இறைவனால் அற்புதமான முறையில் காப்பாற்றப் பட்டார்!
ஆம், இறைவன் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான்!
ஆம், அவரது வாழ்நாள் நெடுகிலும் அற்புதங்கள்....
= தந்தையின்றிப் பிறந்தார்...
= கைக்குழந்தையாக இருந்த போதே பொதுமக்கள் முன் பேசினார்!
= பிறக்கும்போதே இறைத்தூதராகவும் வேத அறிவோடும் அவதரித்தார்!
= பிறவிக் குருடர்களையும் குஷ்டரோகிகளையும் தடவியே குணப்படுத்தினார்!
= இறந்தவர்களை உயிர்பித்தார்.
= உணவு மரவையை வானில் இருந்து இறக்கினார்!
= முன்னர் வந்த இறைத்தூதை உண்மைப் படுத்தினார், பின்னர் வர இருக்கும் தூதர் பற்றி தீர்க்கதரிசனம் உரைத்தார்!
=  பகைவர்கள் தாக்கவந்தபோது அற்புதமாய் விண்ணேற்றமும் செய்தார்!
= இவையும் இன்னும் பலவும்! ஆனாலும் இவை எல்லாம் இதுவரை நிகழ்த்திய சில அற்புதங்கள்... ஆனால் இன்னும் அவர் நிகழ்த்த உள்ளவை பல!
ஆம், மீண்டும் இந்த பூமிக்கு வந்து இன்னும் பற்பல அற்புதங்களையும் புரட்சிகளையும் நிகழ்த்த உள்ளார் அந்த புனித மகான்!
அத்தனை அற்புதங்கள் நிகழ்த்தியபோதும்  அவை அனைத்தும்  தன்னை அனுப்பிய இறைவனின் செயலே அவை என்றார் இயேசு! அவன் அருளே அவை என்று தெளிவுபட மக்களுக்கு சொன்னார்!
= தந்தையின்றி பிறந்தார் என்பதற்காக தன்னை இறைமகன் என்று சொல்லிக் கொண்டதில்லை!
= யாருமே நிகழ்த்தாத அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியபோதும் தன்னையே கடவுள் என்றும் தன்னை வழிபடுங்கள் என்று மக்களை எவியதில்லை!
= இறைவனுக்கு நெருங்கியவர் என்று சிறப்பிக்கப் பட்டதற்காக தன்னை இடைத்தரகராக பாவிக்கச் சொல்லவில்லை! தன் மூலமே இறைவனை நெருங்க முடியும் என்று வாதிடவில்லை! நானே பாவங்களை மன்னிக்கின்றவன் என்று சொல்லிக்கொண்டதில்லை!
மாறாக அனைத்து இறைத்தூதர்களும் தத்தமது மக்களுக்கு போதித்தது போலவே தன்னையும் விண்ணையும் மண்ணையும் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனை மட்டுமே வணங்கச் சொன்னார் அவர். அவன் கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்ந்து பரலோக இன்பமாம் சொர்க்கத்தை அடையவே மக்களுக்கு போதித்தார் இயேசு. அவரவர் பாவங்களுக்கு அவர்களே பொறுப்பு என்றார். பாவம் தவிர்த்து வாழவும் இறைவனிடமே நேரடியாக பாவமன்னிப்பு கோரவுமே கற்றுக்கொடுத்தார் இயேசு! அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக!
=  பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தம் செய்கிறவனே பரலோக
ராஜ்யத்தில் பிரவேசிப்பனேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே
என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை (மத்:7-21)

=  நீங்கள் மனம்திரும்பி பிள்ளைகளை போல ஆகாவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் (மத்:18-31)

இஸ்லாமிய- கிருஸ்தவ நல்லிணக்கச் சிறப்பிதழ் 
http://quranmalar.blogspot.com/2016/12/blog-post_25.html

இறைத்தூதர்கள் வரிசையில் முஹம்மது நபியும் இயேசு நாதரும்

ஒன்றே மனித குலம்! ஒருவனே இறைவன், அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன்! அவன்பாலே நம் மீளுதல், அதன் பிறகே நித்திய வாழ்வு! என்ற மனித வாழ்வின் அடிப்படை உண்மைகளை மனித மனங்களில் விதைத்து மக்களை நேர்வழிப்படுத்த அந்த மனிதர்களில் இருந்தே புனிதர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தன் தூதர்களாக நியமித்தான் இறைவன். அந்த இறைத்தூதர்களை உலகின் பல்வேறு பாகங்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் அனுப்பி வந்துள்ளான். அவர்கள் அனைவரும் தத்தமது மக்களை நோக்கி கீழ்கண்ட சத்திய போதனைகளைச் செய்தார்கள்:
  • மக்களே, உங்களைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒருவனே அவனுக்கு நன்றி உள்ளவர்களாக வாழுங்கள். அவனையே வணங்குங்கள்.அவன் மட்டுமே உங்கள் பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்கக்கூடியவன். அவனை விடுத்து படைப்பினங்களை ஒரு போதும் வணங்காதீர்கள். அவ்வாறு செய்தால் பிரிந்து விடுவீர்கள்.  
  • இன்று நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் தற்காலிக உலகம் ஒருநாள் அழிக்கப்படும். பிறகு உங்கள் வினைகளை விசாரித்து அதற்கான கூலி வழங்குவதற்காக இறுதித்தீர்ப்பு நாள் ஏற்படுத்தப்படும். அன்று நல்லோருக்கு சொர்க்கமும் தீயோருக்கு நரகமும் விதிக்கப்படும். எனவே இறை கட்டளைகளைப் பேணி வாழுங்கள்.சொர்க்கத்தை அடையலாம். மாறாக ஷைத்தானுக்கும் மனோ இச்சைகளுக்கும் அடிபணிந்தால் நரகத்தை அடைவீர்கள். அவைதான் உங்கள் நிரந்தர வாழ்விடமாக இருக்கும்.
அவ்வாறு வந்த இறைத்தூதர்கள் தத்தமது மக்களுக்கு பாவம் எது புண்ணியம் எது என்பதை விளக்கிக் கூறுவதோடு ஒரு முன்மாதிரி புருஷர்களாகவும் அம்மக்களிடையே வாழ்ந்து காட்டுவார்கள். இவ்வாறு அவர்கள் தத்தமது நாடுகளில்  .அந்த மக்களோடு இணைந்து தர்மத்தை நிலை நாட்டுவார்கள். மக்களும் கலப்படமில்லாத ஏக இறைவழிபாடு மூலம் ஒன்றிணைந்த நல்லொழுக்கமுள்ள சமூக வாழ்வில் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் அமைதியையும் அனுபவிப்பார்கள்.
பிறகு எவ்வாறு அதர்மம் தலை தூக்கிற்று?
இதற்கான விளக்கத்தை அறிய உதாரணமாக ஒரு குறிப்பிட்ட ஊருக்கு ஒரு இறைத்தூதர் வந்து மக்களை மேற்படி போதனைகள் செய்து தர்மத்தை நிலைநாட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இவ்வாறு தர்மம் நிலைநாட்டப்பட்ட நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் அந்த இறைத்தூதர் மரணம் அடைகிறார். நிலை நாட்டப்பட்ட தர்மத்தின் தாக்கம் மேலும் தொடர்ந்து கொண்டிருக்கும். ஆனால் நாள் செல்லச் செல்ல என்ன நடக்கிறது?
பிற்கால மக்களில் சிலர் இறந்து போன இறைத் தூதருக்கு அஞ்சலி என்ற பெயரில் அவருக்கு ஒரு ஓவியத்தை வரைந்து மரியாதை செய்ய ஆரம்பிப்பார்கள். நாள் செல்லச் செல்ல ஷைத்தானுடைய தாக்கத்தால் அந்த இறைத்தூதருக்கு சிலை வடிக்கப் படுகிறது! மக்கள் அந்த இறைத்தூதரையே வணங்க முற்படுகிறார்கள் ! என்ன விபரீதம்! படைத்தவனை மட்டுமே வணங்குங்கள் , மனிதர்களையோ, புனிதர்களையோ, சிலைகளையோ எதையுமே வணங்காதீர்கள் என்று மக்களிடையே பிரச்சாரம் செய்து தர்மத்தை நிலை நாட்டியவருக்கே சிலை வடிக்கப்பட்டு அவரையே வணங்கும் மடத்தனம்! , இல்லை இல்லை அவரது சிலையை வணங்கும் மடத்தனம்! நாளடைவில் அவருக்காக கோவிலும் கட்டப்படுகிறது.
(இதை உங்களால் நம்ப முடியவில்லையா? ஓர் அண்மை உதாரணத்தைப் பாருங்கள். கடவுளே இல்லை என்று சிலைகளை உடைத்த பெரியாருக்கே தாங்கள் பகுத்தறிவு வாதிகள் என்று மார் தட்டிக்கொள்பவர்களே சிலை எடுத்தது மட்டுமல்ல தவறாமல் மாலை இடவும் செய்கிறார்கள்!)
உயிரற்ற உணர்வற்ற ஒரு செதுக்கப்பட்ட பொருளை இப்பேரண்டத்தைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனுக்கு ஒப்பாக்கும் ஒரு மாபெரும் மூட நம்பிக்கைக்கு மக்கள் இடம் கொடுத்ததைத் தொடர்ந்து என்ன நடக்கிறது?
  • பல மூட நம்பிக்கைகள் உடலேடுக்கின்றன.
  • கடவுளுக்கு நாங்கள் தான் நெருங்கியவர்கள் , எங்கள் மூலமாகத்தான் கடவுளை நெருங்க முடியும் என்று கூறிக்கொண்டு இடைத்தரகர்களும் புரோகிதர்களும் உருவாகிறார்கள்.
  • கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டு மக்களை ஏய்த்துப் பிழைக்கும் ஒரு கூட்டம் புறப்படுகிறது.
  • அந்நாட்டு அரசனையும் செல்வந்தர்களையும் தன கைக்குள் கொண்டு வந்து புரோகிதம் நாட்டை ஆள்கிறது.
  • பாமரர்களுடையதும் சாமானியர்களுடையதும் உரிமைகள் கொள்ளை போகின்றன.
  • கல்லையும் மரத்தையும் காட்டி கடவுள் என்று கற்பிக்கப் படுவதால் மக்களின் உள்ளத்தில் கடவுளைப்பற்றிய பயம் போய் விடுகிறது.
  • தன செயல்களுக்கு கடவுளிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது.
  • பாவங்கள் மலிந்து விடுகிறது.
  • அநியாயமும் அக்கிரமங்களும் கொலைகளும் விபச்சாரமும் பெருகி வழிகின்றன.
இவ்வாறு அதர்மம் பரவி நாட்டை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக புதிய தூதர் ஒருவர் அனுப்பப்படுகிறார். அவர் மீண்டும் மக்களுக்கு முந்தைய இறைத்தூதர் போதித்த அதே அடிப்படை உண்மைகளை நினைவூட்டி மக்களை மீண்டும் படைத்தவனை வணங்குமாறு அழைப்பார். அவர்கள் செய்து கொண்டிருக்கும் மூட பழக்கவழக்கங்களை எடுத்துரைப்பார். இப்போது என்ன நடக்கிறது? சிந்திக்கும் மக்கள் இவரது போதனைகளால் நல்லுணர்வு பெற்று இவரை பின் தொடர ஆரம்பிப்பார்கள். மற்றவர்களோ 'இல்லை ,எங்கள் மூதாதையர்கள் எதில் இருந்தார்களோ அதுவே சரி, உங்கள் போதனை எங்களுக்குத் தேவை இல்லை' என்று மறுத்து எதிர்ப்பார்கள். அதர்மத்தையும் அக்கிரமங்களையும் மூலதனமாக கொண்டு வயிறு வளர்போரும் அரசியல் நடத்துவோரும் இம்மக்களை முழு மூச்சாக இறைத் தூதருக்கும் சத்தியத்தை ஏற்றுக் கொண்டோருக்கும் எதிராக முடுக்கி விடுவார்கள். ஆனால் காலப்போக்கில் இறை அருள் கொண்டு தருமம் மறுபடியும் வெல்லும்! .
தொடர்ந்து புதிய இறைத்தூதரும் அவருடைய பிற்கால மக்களால் வணங்கப்படுகிறார். அவருக்கும் சிலைகளும் கோவில்களும் எழுப்பப்படுகின்றன. அந்த அதர்மமானது அவரது பெயரைச் சூட்டி ஒரு மதமாக உருவெடுக்கிறது. மீண்டும் ஒரு புதிய தூதர்.......என மீண்டும் அதே கதைத் தொடர்கிறது. இவ்வாறு வந்த தூதர்களின் வரிசையில் கடைசியாக வந்த இறைத் தூதர்தான் முஹம்மது நபி அவர்கள். அவருக்கு முன்னதாக வந்து சென்றவர்தான் இயேசு கிருஸ்து அவர்கள். (அவர்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாவதாக!)

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி இதழ்

திருக்குர்ஆன் நற்செய்தி மலர்  - ஜனவரி இதழ்
https://drive.google.com/file/d/0B3OxgRe6lIusa2QycFJheVJsdjQ/view?usp=sharing

செவ்வாய், 23 டிசம்பர், 2014

இயேசுவிடமிருந்து முஸ்லிம்கள் கற்கும் பாடங்கள் -1

இயேசுவின் தோற்றமும் விண்ணேற்றமும்  
யாகோப்(யஃகூப்) என்ற தீர்க்கதரிசியே  'இஸ்ராயீல்' என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்களின் சந்ததியில் வந்தவர்கள்கள்தான் யூதர்கள் என்று அழைக்கப்படக்கூடிய இஸ்ரவேலர்கள்.

யாகோபிற்கு மரணம் நெருங்கியதும் அவர் தம் மக்களிடம் கேட்கிறார் ''எனக்கு பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?''மக்கள் பதில் சொல்கிறார்கள் ''நீங்கள் வணங்கிய அந்த வணக்கத்திற்குரியவனும் உங்கள் (குடும்ப) முன்னோர்களான அப்ரஹாம்(இப்ராஹீம்) இஸ்மவேல்(இஸ்மாயீல்) ஈசாக்(இஸ்ஹாக்) ஆகியோர் வணக்கத்திற்குரியவனாக ஏற்று வணங்கிய அந்த ஒரே இறைவனையே வணங்குவோம்'' (அல் குர்ஆன் 2:133)

யாகாபின் சந்ததிகள் (யூதர்கள்) ஏக இறை வழிபாட்டிலேயே நிலைத்திருந்தார்கள். பல இறைத்தூதர்களும் அந்த சந்ததிகளில் வந்தார்கள். பல இறைத்தூதர்களிடமிருந்து அறிவுரைகளைப் பெற்றபோதிலும் யூதர்கள் பின்னாளில் கடின சித்தம் உள்ளவர்களாகவும் எத்தகைய கொடுமையை செய்வதற்கும் அஞ்சாதவர்களாகவும் மாறிப்போனர்கள். மோஸே அவர்களுக்குப் பிறகு இறைவன் தொடர்ச்சியாக யூதர்களுக்காக தீர்கதரிசிகளை அனுப்பிக் கொண்டிருந்தான். அப்படி அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் அவர்களது அநியாயமான செயல்பாடுகளுக்கு எதிராக இருந்ததால் அவர்களில் பலரும் அந்த யூதர்களால் பொய்பிக்கப்பட்டார்கள் அல்லது கொலை செய்யப்பட்டார்கள்.

இந்த சூழலில்தான் அந்த சமூகத்திற்கு வழிகாட்ட இயேசு(ஈஸா) தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எவ்வளவுதான் கெட்ட சமுதாயமாக இருந்தாலும் அதிலும் அபூர்வமாக இறைவனுக்கு அஞ்சி தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடிய சில நல்ல மனிதர்கள் இருந்து விடுவது இயல்புதான். அந்த நல்லவர்கள் மூலமாகவும், தாம் நல்லவர்களாக உருவாக்கும் தம்முடைய சந்ததிகள் மூலமாகவும் - வரும் தலைமுறைக்கு - நல்ல விஷயங்கள் போய் சேர இது வழிவகுக்கிறது. இறைவன்தான் இந்த ஏற்பாட்டை செய்கிறான். இறைவனின் இந்த ஏற்பாட்டின் அடிப்படையில்தான் யூத வம்சத்தில் பிறந்த இயேசு(ஈஸா) அவர்களின் பாட்டி - அதாவது மரியாள்(மர்யம்) உடைய தாயார் - நல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். இறைவனுக்கு அஞ்சி அவனுக்கு மட்டும் வழிபட்டு நடந்த அந்த அம்மையாரின் பிரார்த்தனைக்காகவும், இயல்பாக அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் பொய்பிக்கப்பட்டு பலர் கொலையும் செய்யப்பட்டதால் கடின சித்தம் படைத்த யூதர்களை நல்வழி படுத்த இயல்புக்கு மாற்றமாக ஒரு அத்தாட்சி மிக்க இறைத்தூதரை அனுப்புவோம் என்ற இறைவனின் ஏற்பாட்டின் படியுமே இயேசு(ஈஸா) அவர்களின் பிறப்பு நிகழ்கிறது.

 (இயேசுவாகிய) அவர் (நம்முடைய) அடியாரேயன்றி வேறில்லை. அவர்மீது நாம் அருள்புரிந்து இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை ஓர் உதாரணமாக்கினோம் (அல் குர்ஆன் 43:59)

இறைத்தூதர்களின் தியாகம்

  இந்த குறுகிய வாழ்வை மனிதர்களுக்கு ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைத்துள்ள இறைவன் மக்கள்  அதர்மத்தின்பால் எவ்வளவுதான் வரம்புமீறிச் சென்றாலும் அங்கு மீண்டும்  தர்மத்தை நிலைநாட்டுவதற்காக அவ்வப்போது தன் தூதர்களை நியமிக்கிறான். அவ்வாறு அதர்மம் அவ்வப்போது கட்டுப்படுத்தப் படாமல் விடப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.
 
  இறைவன் நினைத்திருந்தால் அப்படியே நம்மை கலவரங்களுக்கும் குழப்பங்களுக்கும்  இடையே  விட்டிருக்கலாம். அவனை கேட்பதற்கு யாரும் இல்லை. ஆனால் அவன் தன் கருணையினால் மீண்டும் மீண்டும் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக மனிதர்களுள் புனிதர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் தனது தர்மத்தை நிலைநாட்டுகிறான். அதற்காக நாம் நம் இறைவனுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். தர்மத்தை நிலைநாட்டும் பணியில் தங்கள் உயிரைத் துச்சமாகக் கருதி தியாகங்கள் பல மேற்கொண்டு இறைவனின் மார்க்கம் பூமியில் நிலைபெற வேண்டும் என்பதற்காக இரவுபகலாக உழைத்த அந்த உத்தமர்களுக்கும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். பூமியில் இத்தனை கலகங்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியிலும் ஆங்காங்கே ஓரளவாவது தர்மமும் நன்மைகளும்  எஞ்சியிருப்பதாகக் காண்பீர்கள் ஆனால் அதற்கு அந்த புனிதர்கள் மேற்கொண்ட தியாகங்களும் முக்கிய காரணமே. பூமியின் எந்த மூலைக்கு அவர்கள் வந்திருந்தாலும் சரியே. நாம் அவர்கள் அனைவரையும் நன்றி உணர்வோடு நினைத்து நாம் அந்த சான்றோர்களுக்காக பிரார்த்திக்கவேண்டும். எல்லாம்வல்ல இறைவன் அவர்கள் அனைவர் மீதும் அருளும் சாந்தியும் நல்குவானாக. மறுமையில் அந்த சான்றோருடன் வாழும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தருவானாக.

இறைத்தூதர்களின் வரிசையில் இயேசுநாதரின் சிறப்பு 

அவ்வாறு இறைவனின் கருணையை பூமியின்மேல் பரப்ப வந்த நல்லோர்களில் ஒருவரே இயேசு.   அவ்வாறு பூமியில் நன்மையை எவ வந்த புனிதர்களை கொடியோர்கள் கொன்று தீர்க்கத் துணிந்தவேளை அவர்களுக்கு இறைவன் புதியதோர் பாடம் கற்பிக்க நினைத்தான் போலும்! பிறக்கும்போதே இறைவனின் தூதராகவே பிறந்தார் இயேசு! வேத அறிவுடன் பிறந்தார் அவர்! அவர் இறைதூதராக ஆற்றவேண்டிய பணிகளை அயராது ஆற்றினார்! இறுதியில் கயவர்கள் அவரைக் கொல்ல முற்பட்டபோது அந்த சதியில் சிக்கவிடாமல் அவரை அற்புதமான முறையில் விண்ணேற்றம் செய்தான் எல்லாம் வல்ல இறைவன்!

3:54-55.  (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!

4:157-158. மேலும் அவர்கள் தம் நிராகரிப்பி(ல் எல்லை மீறிவிட்டத)னாலும் மர்யம் மீது பெரியதொரு அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வுடைய தூதரும் மர்யமின் மகனுமான ஈஸா மஸீஹை நாங்கள் தாம் கொன்றோம். என அவர்கள் கூறியதாலும் (அவர்களை நாம் சபித்தோம்). உண்மையில் அவர்கள் அவரைக் கொலை செய்யவுமில்லை, அவரைச் சிலுவையில் அறையவுமில்லை. மாறாக, அவருடைய நிலைமை அவர்களுக்குச் சந்தேகத்துக்குரியதாக ஆக்கப்பட்டு விட்டது. மேலும், எவர்கள் ஈஸா விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அவர்கள் இதுபற்றி சந்தேகத்திலே இருக்கின்றார்கள். யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர இதுபற்றி வேறு எந்த அறிவும் அவர்களிடத்தில் இல்லை. நிச்சயமாக அவர்கள் அவரை மஸீஹை கொலை செய்யவேயில்லை. மாறாக அல்லாஹ் அவரைத் தன்பக்கம் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வலிமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாய் இருக்கின்றான்.

வெள்ளி, 19 டிசம்பர், 2014

கடவுளைப் புரிந்து கொள்ளாமையால் மனித இனம் சந்திக்கும் இழப்புகள்


 
பகுத்தறிவு கொண்டு ஆராயும் எவரும் தனக்கு மீறிய சக்தி ஒன்று தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள இவ்வுலகையும் படைத்து பரிபாலித்து வருவதை உணருவார்கள். அந்த சக்தியைத்தான் ஆத்திகர்கள் கடவுள் அல்லது இறைவன் என்று போற்றி வணங்குகிறார்கள். அந்த கடவுளை சரிவர ஆராய்ந்து ஏற்றுக் கொள்பவர்களும் உள்ளனர். ஆராயாமல் முன்னோர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் நம்புவோரும் உள்ளனர். இரண்டாம் வகை நம்பிக்கை மிகவும் ஆபத்தானது. நாத்திகத்தைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
பாவங்களும் ஒழுக்கமின்மையும் வளர மூலகாரணம்:
மனிதன் நல்லவனாக, நல்லொழுக்கம் உடையவனாக வாழவேண்டுமானால் அவனுள் இறையச்சம் என்பது இருக்கவேண்டும். அதாவது என்னைப் படைத்த இறைவன் என்னைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான், இவ்வாழ்க்கைக்குப் பிறகு அவனிடமே திரும்பவேண்டியது உள்ளது, அவன் என் நற்செயல்களுக்கு பரிசும் பாவங்களுக்கு தண்டனையும் வழங்க உள்ளான் – அதாவது அவனிடம் நான் எனது ஒவ்வொரு செயல்களுக்கும் பதில் சொல்லியாக வேண்டும் - என்ற பொறுப்புணர்வுக்கே இறையச்சம் என்று கூறப்படும். இது இல்லாதபட்சம் எந்தப் பாவத்தையும் செய்வதற்கு மனிதன் சற்றும் தயங்க மாட்டான். இந்த இறையச்சம் மனிதர்களிடம் இல்லாமல் போவதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் காணப்படுகின்றன.
= அறவே நிரூபிக்கப்படாத மனித ஊகங்களைக் கோர்வையாக்கி பரிணாமக் கொள்கை என்ற பெயரில் தவறான அறிவியலை மக்களுக்குக்  கற்பித்து இறைவனை மறுக்கும் நாத்திகம் போதிக்கப்படுவது.
= இறைவனின் தூதர்கள் போதித்தபடி  படைத்த இறைவன்தான் வணங்குவதற்குத் தகுதியானவன் என்று மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதை விட்டுவிட்டு, குழந்தைப் பருவம் முதல் படைப்பினங்களின் உருவங்களையும் சமாதிகளையும் எல்லாம் காட்டி வையே உன் கடவுள் என்று போதிக்கப்படுவது.
இவ்வாறு இறையச்சம் இல்லாத தலைமுறைகள் உருவாகும்போது பாவம் செய்ய அஞ்சாத சமூகம் உருவெடுத்து அங்கு அமைதியின்மையும் கலவரங்களும் மேலோங்குகின்றன. இவை ஒருபுறம் நாட்டின் ஒழுக்க வீழ்ச்சிக்கு காரணமாகும்போது மறுபுறம் தவறான கடவுள் கொள்கை நாட்டில் மிகப்பெரும் இழப்புகளையும் விபரீதங்களையும் ஏற்படுத்துகிறது.
இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் கீழ்கண்டவாறு கடவுளின் முக்கிய இலக்கணங்களை கூறுகிறது:
= 112: 1-4. நபியே நீர் சொல்வீராக: அல்லாஹ் ஒரே ஒருவனே. அல்லாஹ் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் யாரையும் பெற்றெடுக்கவில்லை. அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை
= 2:186. (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ''நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்"" என்று கூறுவீராக.
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்கு தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
 அதாவது ஏகனாகிய இறைவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். ஒப்பில்லாதவன். அவனது படைப்பினங்களைப் போல் மற்றவர்களை சார்ந்து இராதவன். தாய் தந்தை, மனைவி, மக்கள் என எந்த உறவுகளும் இல்லாத தனித்தவன். தன்னிகரற்றவன். அவனை எந்த இடைத்தரகர்களும் இன்றி நேரடியாக வணங்கலாம். அவனிடம் நேரடியாக நம் தேவைகளைக் கேட்டு பிரார்த்திக்கலாம் என்ற கருத்துக்களைத் தாங்கி நிற்கின்றன மேற்படி வசனங்கள். இவையே நாம் வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த இறைவனின் உண்மை இலக்கணங்கள் என்பதை சிந்திப்போர் அறியலாம். ஆனால் இவ்விலக்கணங்களை ஆராயாமல் இறைவன் அல்லாதவற்றையெல்லாம் கடவுள் என்று நம்பி வழிபடும்போது ஏற்படும் மற்ற விபரீதங்களில் சிலவற்றை கீழே காண்போம்...
= எளிமையான வழிபாடு வியாபாரமாக்கப் படுதல்
படைத்த  இறைவனை வழிபடுவதற்கு எந்தப் பொருட்செலவும் தேவை இல்லை. எந்த தரகர்களும் தேவை இல்லை. எந்த வித வீண் சடங்குகளுக்கும் அங்கு இடமில்லை. ஆனால் படைத்தவனை விட்டு விட்டு போலி தெய்வங்களை வணங்க முற்படும்போது இறைவழிபாடு என்பது கடினமாக்கபடுகிறது. வீண் சடங்குகளும் மூட நம்பிக்கைகளும்  இடைத்தரகர்களும் இடையே நுழைந்து இது  மாபெரும் வியாபாரமாக்கப் படுகிறது. 
= இடைத்தரகர்கள் ஆதிக்கம்
கண்டதெல்லாம் கடவுள் என்று மக்கள் நம்பத் தலைப்படும் போது அதைச்சுற்றி இடைத்தரகர்கள் உருவாகிறார்கள். பின்னர் அவர்கள் சொல்வதுதான் சட்டம் என்றாகிறது. அவர்கள் தம் மனம் போனபடி மக்களை ஏய்த்து தம் வயிற்றை நிரப்பிக் கொள்ள பாவ பரிகாரம், தோஷ பரிகாரம் என்றெல்லாம் பெயர் சொல்லி பாமரர்களின் சம்பாத்தியங்களையும் செல்வங்களையும்  கொள்ளை அடிக்கிறார்கள். 
= பெரும் மோசடி
கடவுளின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைப்பதற்கான எளிமையான மார்க்கமாக இது மாறிவிடுகிறது. கீழ்கண்ட கேள்விகளுக்கு நாம் விடை தேடினாலே நமக்கு உண்மை தெரிந்து விடும்:
அ. இந்நாட்டில் எந்த வித உற்பத்தியோ சேவையோ மக்களுக்கு தராமல் மக்களின் பணத்தை மட்டும்  கறந்து கொண்டிருக்கும் வியாபாரம் எது?
ஆ. மக்களின் குருட்டு நம்பிக்கைகளைத் தவிர வேறு எந்த வித முதலீடும் மூலதனமும் இல்லாமல் மூலைக்கு மூலைநாளுக்கு நாள் பெருகி வரும் வியாபாரம் எது?
இ.  நாட்டின் பொருளாதாரத்துக்கோ மக்களின் நலனுக்கோ எவ்வித பங்களிப்பும் செய்யாது பெரும் ஊதியங்களைப் பெற்றுக் கொண்டிருக்கும் நபர்கள் யார்?
ஈ.  நாட்டின் கறுப்புப் பண முதலைகளுக்கும் சுரண்டல்காரர்களுக்கும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் அலைகழித்துக் கொண்டிருக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருக்கும் கூட்டாளிகள் யார்?
இவற்றுக்கும் இன்னும் இவை போன்ற கேள்விகளுக்கும் நாம் பெறும் ஒரே  விடை - இறைவன் அல்லாதவற்றை கடவுளாக சித்தரித்து செய்யப்படும் மோசடி வியாபாரமும் அந்த வியாபாரிகளும் ஊழியர்களும்தான்.
= மனிதகுலத்துக்குள் பிரிவினைகளும் ஜாதிகளும் உருவாகுதல்
ஒரே இறைவனுக்கு பதிலாக பல போலிக் கடவுள்கள் வணங்கப்படும் நிலையில் ஒரே மனித குலம் பல ஜாதிகளாகவும் பிரிவுகளாகவும் கூறுபோடப்பட்டு மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இந்நிலை மாற ஒரே வழி ஒன்றே குலம் ஒருவன் மட்டுமே இறைவன் என்ற கொள்கையை மக்கள் மனதில் வேரூன்றச் செய்வது மூலமே சாத்தியம். இதைத்தான் இறைவனின் இறுதித் தூதர் மூலமாக மறு அறிமுகம் செய்யப்பட்ட இஸ்லாம் என்ற மார்க்கம் உலகெங்கும் செய்து வருகிறது.
இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் உண்மை  இறைவனை விட்டுவிட்டு அவன் அல்லாதவற்றை வணங்கும் போது ஏற்படும் விபரீதங்கள் சிலவற்றை மேலே கண்டோம். பாவங்கள் கட்டுக்கடங்காமல் பெருகுதல், ஒழுக்க வீழ்ச்சி, மூடநம்பிக்கைகள் பெருகுதல், கடவுளின் பெயரால் நாடு சுரண்டப்படுதல், மனிதகுலத்தில் பிளவுகள், கலகங்கள் என பலவற்றுக்கும் அது காரணமாகிறது. எனவேதான் இப்பாவம் இறைவனால் எல்லாக்காலங்களிலும் வன்மையாகக் கண்டிக்கப்பட்டு வந்துள்ளது என்பதை ஒவ்வொருகாலத்திலும் அனுப்பபட்ட இறைவேதங்களில் இடம்பெறும் ஆதாரங்களில் இருந்து காணலாம்:
= இந்து வேதங்களில்....
·  யாருடைய அறிவு உலகாசையால் களவாடப்படுகிறதோ அவர்களே போலிதேய்வங்களை வணங்குகிறார்கள். (பகவத் கீதை )
·  அந்தம் தமஹ பிரவிசந்தி யா அசம்பூதி முபாசதே - (பொருள்: யார் இயற்கை வஸ்த்துக்களைகாற்று நீர், நெருப்பு போன்றவை) வணங்குகிறார்களோ அவர்கள் அறியப்படாத இருளில் மூழ்குகின்றனர்.) - யஜுர்வேதம்  Yajurveda, Chapter 40, Verse 9
·   யார் மனிதர்களால் படைக்கப்பட்ட பொருட்களை (மேஜை,நாற்காலி, சிலைகள் போன்றவற்றை) வணங்குகிறார்களோ அவர்கள் இன்னும் ஆழமான இருளில் மூழ்குகின்றனர் என்று தொடர்ந்து கூறுகிறது யஜூர் வேதம்.
= பழைய  ஏற்பாட்டில்....
எகிப்து தேசம்! அடிமைத்தள வீடாகிய எகிப்து தேசத்தில் இருந்து உங்களை பிறப்படப் பண்ணிய கர்த்தராகிய நானே தேவன். என்னையல்லாது வேறு ரட்சகனில்லை. மேலே வானத்திலேயும், கீழே பூமியிலேயும், பூமியின் கீழ் தண்ணீரிலேயும் கர்த்தருக்கு இணையாக யாதொரு சொரூபத்தையும், யாதொரு விக்ரகத்தையும் நீர் எடுத்துக் கொள்ள வேண்டாம். கர்த்தர் அதை வெறுக்கிறார் என்று கூறுகிறது.
= புதிய ஏற்பாட்டில்...
   அந்நாளில் (நீதி விசாரணை நாளில்) அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலேயே  தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா…? உமது நாமத்தினாலேயே  அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா…? என்பார்கள். அப்போது நான் (ஏசு) ஒருக்காலும் உங்களை அறியவில்லைஅக்கிரமச் செய்கையாரே! என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்வேன்.  (மத்தேயு 7:21)
= இஸ்லாத்தில்.....
=   அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ்விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதிஇழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)

= நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம் புகுவார்.
அறிவிப்பு : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) (நூல்:புஹாரி)
--------------------- 
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம்

மறுக்கமுடியுமா மறுமை வாழ்வை?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html